
“கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” – மத் 7:7
உங்கள் வாழ்க்கையில் ஒரு சூழ்நிலையைப் பற்றி நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஒரு திருப்பு முனைக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறீர்களா? பதில் ஏன் இன்னும் வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வெற்றி உங்களை கடந்து செல்வதைப் போல உணர்கிறீர்களா?
சில நேரங்களில் நம் வாழ்க்கையில் ஒரு சூழ்நிலைக்காய் கடினமாக ஜெபித்தும் நீண்ட காலமாக எந்தவொரு பதிலையும் பெறாமல் இருக்கும் போது, அதனுடன் வாழ, கற்றுக்கொள்கிறோம். தேவன் பதிலளிப்பார், எப்போது அளிப்பார் என்று யோசித்துக் கொண்டே நம் வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்போம். ஆனால் தேவன் நம் ஜெபங்களைக் கேட்கிறார். எல்லா விவரங்களும் நமக்குத் தெரியாவிட்டாலும் அவர் பதிலளிக்கிறார். நம்முடைய நிலைமை திடீரென்று-விரைவாக, எச்சரிக்கையின்றி மாறக்கூடும்!
அதுவரை நாம் செயலற்ற முறையில் அல்லது எதிர்பார்ப்புடன் காத்திருக்கலாம். ஒரு செயலற்ற நபர் கைவிட்டு விடுகிறார், ஆனால் எதிர்பார்ப்பவர், மறுபுறம், நம்பிக்கையுடன் இருக்கிறார். பதில் ஒரு மூலையில் தான் இருக்கும், எந்த நிமிடமும் வருலாம் என்று நம்புகிறார். அவரது நம்பிக்கை ஒரு செயலற்ற விஷயம் அல்ல. அவரது இருதயம் நம்பிக்கையுடன் நிறைந்துள்ளது. எந்த நேரத்திலும் அவரது பிரச்சினை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறார். தினமும் காலையில் தனது பதிலைக் கண்டுபிடிப்பார் என்று எதிர்பார்த்து அவர் எழுந்திருக்கிறார். அவர் காத்திருக்கலாம், அவர் கேட்டுக்கொண்டே இருப்பார், ஆனால் திடீரென்று கடவுள் எல்லாவற்றையும் திருப்புகிறார்.
ஜெபம்
தேவனே, நான் எதிர்பார்ப்புடன் காத்திருக்க விரும்புகிறேன். செயலற்ற முறையில் அல்ல. நீர் சரியான நேரத்தில் விடிவு காலத்தை ஏற்படச் செய்வீர் என்பதை நன்கு அறிந்தவனாக, நான் அதற்காய் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.