
“நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.” – சகரியா 9:12
ஒரு கேள்வியொன்றை உங்களிடம் கேட்கின்றேன். எதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? வாழ்க்கையிலே எதை எதிர்பார்க்கின்றீர்கள்? ஏதாவது நல்லது நடக்க எதிர்பார்க்கின்றீர்களா? அல்லது ஏமாந்து போக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
இந்த நாட்களிலே அனேகர் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். இப்படி நம்பிக்கையற்று இருக்க இயேசு மரிக்கவில்லை. நாம் நம்பிக்கையால் நிரம்பியிருப்பதற்காகவே இயேசு மரித்தார்.
பிசாசு உங்கள் நம்பிக்கையை திருட விரும்புகிறான். அவன் உங்களிடம் பொய் கூறுவான். அவன் உங்கள் வாழ்விலே நல்லதொன்றும் நடக்காதென்றும் அல்லது நீங்கள் பெற்றிருக்கும் நல்ல காலம் நிரந்தரமானதல்லவென்றும் சொல்லுவான். நீங்கள் ஒரு கடினமான சூழ்னிலையில் இருப்பீர்களென்றால் அது முடியவே, முடியாது என்று சொல்லுவான். ஆனால் நம்பிக்கை நிறைந்தவர்களாய் இருங்கள். பிசாசு ஒரு பொய்யன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனால் எல்லாவற்றையும் மாற்ற இயலும்!
நம் பிதா நல்லவர், உங்கள் வாழ்க்கைக்கென்று நல்ல திட்டங்களைக் கொண்டிருக்கிறார். உங்கள் நம்பிக்கையை கைவிடாதிருப்பீர்களென்றால் விஷேசமாக கலக்கமான, உறுதியற்ற சமயங்களிலே அவர் உங்கள் கலக்கங்களுக்கெல்லாம் இரட்டத்தணையான பலனை அளிப்பதாக வாக்குப்பண்ணியிருக்கிறார். எனவே நம்பிக்கையை விட்டு விட மறுத்து விடுங்கள். தேவன் ஏதாவது நல்லதை செய்ய எதிர்பாருங்கள்.
ஜெபம்
தேவனே, என் நம்பிக்கை உம்மிலே இருக்கின்றது. சாத்தான் ஒரு பொய்யன். நான் அவனுக்கு செவி சாய்த்து என் நம்பிக்கையை இழக்க மாட்டேன். என் வாழ்விலே நற்காரியங்களை செய்ய உம்மை எதிர்பார்க்கின்றேன்.