“ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.” – நீதி 16:23-24
நீதி 16:23-24, நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. அவைகள் எலும்பும், ஊனும் போல அவ்வளவு நெருக்கமானது. அவற்றை பிரிப்பது கடினம். (எபே 4:12) இதனால் நாம் நல்ல வார்த்தைகளைப் பெற்றிருக்க நல்ல என்ணங்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமானது.
நம் எண்ணங்கள், நினைவுகளெல்லாம் நாமும் தேவனும் மட்டுமே கேட்கக்கூடிய அமைதியான வார்த்தைகளாகும். ஆனால் அந்த வார்த்தைகள் நம் உள்ளான மனுஷனை, நம் ஆரோக்கியத்தை, சந்தோசத்தை, மனப்பான்மையை பாதிக்கிறது. நாம் அடிக்கடி நினைக்கும் காரியங்கள் நம் வாய் மூலமாக வெளிப்படுகின்றது. சில சமயங்களிலே நம்மை முட்டாள்களைப் போல தோன்றச் செய்கிறது. ஆனால் நாம் தேவனுடைய வழியில் வாழ்வோமென்றால் நம் நினைவுகளும், வார்த்தைகளும் நம் வாழ்க்கையை அதிக கரிசனையுள்ளதாக மாற்றக்கூடும்.
நீங்கள் உங்கள் எண்ணங்களை உலகப்பிரகாரமாக விட்டு விட்டு பின்னர் தேவனுக்கேற்ற வார்த்தைகளைப் பேசி நடிக்கலாம் என்று எண்ணும் தவற்றை செய்து விடாதீர். இரண்டுமே பிரியமாக இருக்கும் அல்லது எதிர்மறையாகவும், பாவமாகவும் இருக்கும். இதற்கு இடைப்பட்ட நிலை எதுவும் இல்லை. கிறிஸ்துவின் மன நிலையிலே செயல்படத் தொடங்குங்கள். ஒரு புதிய ஜீவிய சாம்ராஜ்ஜியத்திற்குள்ளாக நுழைவீர்கள். அவர் உங்கள் நினைவுகளை சரிபடுத்த அனுமதிக்கும் போது அருமையான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று எண்ண வேண்டிய அவசியம் இராது. அது தானாக நடக்கும்!
ஜெபம்
தேவனே, என்னுடைய எண்ணங்களும், வார்த்தைகளும் இணைந்திருக்கிறது என்று அறிவேன். ‘உள்ளே’ இல்லாததை ‘வெளியே’ இருப்பதைப் போன்று நடிக்க விரும்பவில்லை. நான் அருமையான தேவனுக்கேற்கும் வார்த்தைகளைப் பேசத்தக்கதாக என் எண்ணங்களை தயவு செய்து சரிபடுத்துவீராக.