எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் சத்தத்திற்கு மதிப்புக் கொடுங்கள்

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் சத்தத்திற்கு மதிப்புக் கொடுங்கள்

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். (எரேமியா 17:7)

நம் வாழ்வில் கடவுளின் பிரசன்னத்தை வரவேற்கும் மனப்பான்மை, எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக அவரை மதிக்கும் மனப்பான்மையாகும். நம் மனப்பாங்குகள் சொல்ல வேண்டும், “கடவுளே, வேறு யாரும் என்னிடம் என்ன சொன்னாலும் சரி, நான் என்ன நினைத்தாலும் சரி, என் சொந்த திட்டம் எதுவாக இருந்தாலும் சரி, நீர் சொல்வதை நான் தெளிவாகக் கேட்டு, அது நீர் என்று எனக்குத் தெரிந்தால், நான் உம்மைப் போற்றுவேன். மேலும் நீர் சொல்வதை மதிப்பேன் – எல்லாவற்றிற்கும் மேலாக” என்று.

சில சமயங்களில் கடவுள் சொல்வதை விட மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். நாம் விடாமுயற்சியுடன் ஜெபித்து, கடவுளிடம் கேட்ட பின், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்க ஆரம்பித்தால், கடவுளின் கருத்துக்களுக்கு மேலாக அவர்களின் கருத்துகளை மதிக்கிறோம் என்று அர்த்தம். இத்தகைய மனப்பான்மை கடவுளின் குரலை நாம் தொடர்ந்து கேட்க முடியாமல் தடுக்கும். நாம் கடவுளிடமிருந்து கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அவருடைய ஆவியால் வழிநடத்தப்பட வேண்டும் என்றால், நாம் பலரின் கருத்துக்களைக் கேட்பதை நிறுத்தி விட்டு, கடவுள் நம் இருதயங்களில் வைக்கும் ஞானத்தை நம்பத் தொடங்க வேண்டும். நல்ல ஆலோசனையைப் பெறுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது. ஆனால் மக்களின் அங்கீகாரம் தேடுவது, கடவுளின் விருப்பத்திலிருந்து நம்மை விலக்கி வைக்கும்.

நமக்கு கடவுளிடமிருந்து கேட்கும் திறன் இல்லை என்று நாம் நினைக்க வேண்டும் என்று பிசாசு விரும்புகிறான். ஆனால் அது உண்மையல்ல என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வசிக்கிறார். ஏனென்றால் நாம் தனிப்பட்ட முறையில் ஆவியானவரால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும் அவர் நம்மை வழிநடத்தும் போது நாம் அவருடைய குரலைக் கேட்க வேண்டும் என்றும் கடவுள் விரும்புகிறார்.

இன்றைய வசனத்தில், நாம் அவரை நோக்கிப் பார்க்கும்போது ஆசீர்வதிக்கப்படுவோம் என்று கடவுள் கூறுகிறார். எரேமியா 17:5-6 இன் படி, மற்றவர்களின் பெலத்தை நம்புபவர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் கர்த்தரை நம்பி வாழ்பவர்கள் பாக்கியவான்கள். கடவுள் சொல்வதைக் கேட்டால் நல்லது நடக்கும். அவர் நம்முடைய பலமாக இருக்க விரும்புகிறார், எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய வார்த்தையை நாம் மதிக்க வேண்டும்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள், ஆனால் கடவுள் சொல்வதைக் கேட்டு அதற்கு கீழ்படியுங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon