எல்லா சமாதானம், சந்தோசத்தால் நிரம்பியிருத்தல்

“பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.” – ரோமர் 15:13

பல ஆண்டுகளுக்கு முன் என் வாழ்விலே சந்தோசமும், சமாதானமும் இல்லாத ஒரு கடினமான காலகட்டத்திற்குள்ளாக நான் கடந்து சென்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் நான் தவறு செய்யும் போது, என்னை ஆக்கினைக்குட்படுத்த நான் துரிதமாக இருந்தேன். ஒரு ‘பரிபூரணமான கிறிஸ்தவளாக’ என்னால் இருக்க முடியவில்லையே என்று கோபமாக இருந்தேன்.

பின்னர் ஒரு நாள் நான் ரோமர் 15:13 ஐ வாசித்தேன். நம்பிக்கையின் தேவன், விசுவாசிப்பதால் உங்களை எல்லா சந்தோசத்தினாலும், சமாதானத்திலும் நிரப்புவாராக ….அவ்வளவு தான் கண்டுபிடித்து விட்டேன். பிசாசு என்னை எல்லா எதிர்மறையான காரியங்களாலும், கோபத்தாலும், பொறுமையின்மையாலும் என்னை துன்புறுத்தத்தக்கதாக அவ்விசுவாசத்துக்குள்ளும், சந்தேகத்திற்குள்ளும் மூழ்கி இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். தேவனை நம்புவதும், அவருடைய வார்த்தையிலே நம்பிக்கையாக இருப்பதும் சமாதானத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வருகிறதென்றும், என் பெலவீனங்களை மேற்கொள்கிறது என்பதையும் மறந்து போயிருந்தேன்.

தேவனுடைய வார்த்தை எனக்கு பதிலைக் கொடுத்தது. இயேசு என் கடந்த காலப் பாவத்தையெல்லாம் மன்னித்ததோடு, என் எதிர்காலத்திலே என் பெலவீனத்தாலே நான் தவறும் எல்லா தருணங்களையும், அவர் முன்னமே மன்னிக்கும் அளவுக்கு என்னை அவ்வளவு அதிகமாக நேசிக்கிறார். பிசாசு அவ்விசுவாச கேள்விகளோடு என்னிடம் தந்திரமாக வர நான் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்களும் தான்.

சமாதானம், நம்பிக்கை, சந்தோசமெல்லாம் உங்கள் முன் இருக்கிறதென்று இன்றே அறிந்து கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு செல்லுங்கள். அது உங்கள் விசுவாசத்தை அனல் மூட்டி எழுப்பும்.

ஜெபம்

தேவனே, ஒவ்வொரு முறையும் நான் எதிரியின் பொய்யை நம்பத் தொடங்கும் போது உம்முடைய வார்த்தையில் இருக்கும் உண்மையை எனக்கு நினைவுறுத்தும். உம்மை விசுவாசிப்பதின் மூலம் இன்று நான் சமாதானத்தையும், சந்தோசத்தையும் பெற்றுக் கொள்கிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon