“கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” – ரோமர் 12:18
நான் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான படிப்பினை என்னவென்றால், “உடையாமலிருக்க வளைந்து கொடு” என்பதே. நாம் மக்களுக்கேற்ப, காரியங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வேதம் சொல்கிறது. முடிந்த அளவு எல்லோரிடமும் சமாதானத்துடன் வாழுங்கள் (ரோமர் 12:16,18).
தேவனுடைய வார்த்தையை என் வாழ்க்கையில் முன்னுரிமையாக்கிக் கொண்டு, கீழ்ப்படிதலுள்ள வாழ்க்கையை வாழ முடிவு செய்வதற்கும் முன்பு, எனக்கு, என் சொந்த வழிதான் வேண்டும் என்றிருந்தேன். நான் பொருந்திக் கொள்ள இயலாதவளாக இருந்தேன். எல்லோரும் எனக்காக தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். நிச்சயமாக, அது அதிக சண்டையையும், மன அழுத்தத்தையும் விளைவித்தது.
நான் இப்போது வளைந்து கொடுக்க கற்றுக்கொண்டேன். நான் திட்டமிட்டபடியல்லாமல், வேறுவிதமாக காரியங்களை செய்வதற்கு விட்டுக் கொடுக்க, என் மாம்சத்திற்கு எப்போதுமே சுலபமானதாக இருக்கவில்லை. ஆனால் வருத்தமாகவும், பரிதாபமாகவும் இருப்பதை விட இது எளிதானது.
உங்கள் உறவுகளில் நீங்கள் சமாதானம் பெற விரும்பினால், நீங்கள் வளைந்து கொடுக்க தயாராக இருக்க வேண்டும். எல்லா நேரத்திலும் உங்கள் சொந்த வழியையே கொண்டிருக்க முயற்சிப்பது, உங்களைச் சுற்றியுள்ளவர்களை காயப்படுத்தும். ஆனால் பவுல் உங்களை ஊக்குவிப்பதைப் போன்று, எல்லோரிடமும் சமாதானமாக வாழ வேண்டுமென்று விரும்பும் போது, பரிசுத்த ஆவியானவர் உங்கள் உறவுகளை, அவருடைய மகிழ்ச்சியாலும், சமாதானத்தாலும் நிரப்புவார்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, நான் உடைந்து போகாதபடி வளைந்து கொள்ள எனக்கு உதவும். எனது உறவுகளில் உம்முடைய சமாதானத்தை நான் விரும்புகிறேன், எனவே நான் வளைந்து கொடுப்பதை தெரிந்து கொள்ளுகிறேன்.