“இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.” – யோவாண் 5:8
யோவாண் 5லே, மாற மறுத்த ஒரு மனிதனுடைய கதை இருக்கிறது. அவன் அனேகரை பிரதிபலிக்கிறவனாக இருக்கிறான்.
எருசலேமில் ஒரு யூத பண்டிகையின் போது, குணமடைவோம் என்ற நம்பிக்கையில், நோயுற்ற மக்கள் கூடியிருந்த பெதஸ்தா என்ற குளத்தருகே, இயேசு சென்றார். குணமடையக் காத்திருந்தவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக ஊனமாக இருந்தான். இயேசு அவனைக் கண்ட போது, அவன் குணமடைய விரும்புகிறானா என்று கேட்டார்.
என்னைப் பொறுத்தவரை, அந்த மனிதனின் பதில், முப்பத்தெட்டு ஆண்டுகளாக அவன் ஏன் குணமடையவில்லை என்று சொல்கிறது. அவன் சொன்னான், “தண்ணீர் கலக்கப்படும் போது என்னை குளத்திற்குள் இறக்கி விட யாரும் இல்லை” அடிப்படை என்னவென்றால், அந்த மனிதன் பொறுப்பைத் தவிர்த்துக் கொண்டிருந்தான்.
அவனது இரண்டாவது பிரச்சனை என்னவென்றால், அவன் மற்றவர்களைக் குற்றம் சாட்டினான். அந்த நபர், “நான் உள்ளே செல்ல முயற்சிக்கும் போது, வேறு ஒருவர் எனக்கு முன்னால் சென்று விடுகிறார்” என்று கூறினான். இயேசு எவ்வாறு பதிலளித்தார்? அவன் மீது அவர் வருத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, இயேசு, “எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட”என்றார்.
உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட, நீங்கள் உங்கள் சூழ்நிலைகளின் கைதியாக இருக்க முடியாது. தேவன் இன்று உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவரை நம்பவும், எழுந்து, அவர் உங்களுக்குக் கொடுக்கும் விடுதலையை தீவிரமாகத் தொடரவும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
ஜெபம்
தேவனே, நான் எனது சூழ்நிலைகளுக்கு பலியாக விரும்பவில்லை. நான் மாற விரும்புகிறேன். நான் உம்முடைய பெலத்தையும், விடுதலையையும் இன்றே பெற்றுக் கொள்கிறேன். நான் உம்முடன் நடக்கும் போது என் வாழ்க்கையில் உண்மையான மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.