எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். (நீதிமொழிகள் 28:14)
தேவன் நம்மிடம் பத்து விதமான வழிகளில் பேசலாம், ஆனால் நாம் நம் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு, அவர் சொல்வதைக் கடைப்பிடிக்க மறுத்தால், அவர் நமக்குக் கொடுக்க விரும்பும் ஆசீர்வாதங்களை நாம் இழந்துவிடுவோம். தேவன் நான் செய்ய விரும்பிய ஒவ்வொரு சிறிய காரியமும் அல்லது நான் செய்ய விரும்பாத எல்லா செயல்களும் எனக்குள் ஒரு மல்யுத்தப் போட்டியாக மாறிய காலத்தை என்னால் நினைவில் கொள்ள முடிகிறது. நான் செய்ய வேண்டும் என்று அவர் சொல்வதைக் குறித்து, தனது மனதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்ற உண்மையை நான் ஏற்றுக்கொள்வதற்குள் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள் மற்றும் சில சமயங்களில் பல ஆண்டுகள் ஆனது.
நான் இறுதியாக அவருடைய வழிக்கு அடிபணிந்த போது, நான் கற்பனை செய்ய முடியாத எதையும் தாண்டி என்னை ஆசீர்வதிக்கும் வழிகளில் காரியங்கள் செயல்பட்டன. முதன் முதலில் கடவுள் என்னிடம் கேட்டதை நான் செய்திருந்தால், நான் நிறைய சிரமங்களைக் தவிர்த்திருக்கலாம்.
நம்மில் பெரும்பாலோர் பிடிவாதமாக இருக்கிறோம், நம்முடைய வழிகள் வேலை செய்யாவிட்டாலும் கூட. எப்படியிருப்பினும், நாம் தேவனிடம் கனிவாக இருக்க கற்றுக்கொள்ளலாம். அப்பொழுது அவருடைய சத்தத்தையும், அவரது ஆவியின் வழிநடத்துதலையும் நாம் உணர முடியும். நமது ஆவி, கடவுளுடன் தொடர்பு கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்மை சிக்கலில் இருந்து விலக்கி வைப்பதற்கும், எது சரி, எது தவறு என்பதை நமக்கு தெரியப்படுத்துவதற்கும் அவர் நம் உள்ளுணர்வு மற்றும் மனசாட்சி ஆகிய இரண்டின் மூலமாகவும் பேசுகிறார். பின்னர், அவருடைய ஆவியின் மூலம், சரியானதைச் செய்ய அவர் நமக்கு உதவுகிறார்.
நீங்கள் உங்களுடைய எல்லா பிடிவாதத்திலிருந்து, கடவுளிடம் திரும்பவும், அவருடைய சத்ததைக் கேட்கவும், கீழ்ப்படியவும் விரும்பும் மென்மையான இருதயத்துடன் அவருடன் நடக்க, இன்று உங்களை ஊக்குவிக்கிறேன்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்களுடைய வழிகளை விட கடவுளுடைய வழிகளில் செல்வது நல்லது.