“நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.” – யோசுவா 1:9
உங்கள் சவால்களை, ஒரு நாளைக்கு ஒன்று என்று ஏற்றுக் கொள்ள உங்களை உற்சாகப்படுத்துகிறேன். முன்பிருக்கும் பாதையின் நீண்ட தூரத்தைப் பார்ப்போமேயென்றால் அது நம்மை மூழ்கடித்து விடும். அவர் நமக்கு ‘அன்றன்றுள்ள அப்பத்தை நமக்கு கொடுக்கிறாரென்று நம்புகிறோம்’. அதாவது நமக்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் போது பெற்றுக் கொள்கிறோம், அதற்கு முன்பாக அல்ல.
சில சமயங்களிலே சவால்கள் முடியாததைப் போன்றும், மேற்கொள்கிறதாகவும் காணப்படலாம், ஆனால் தேவன் நம்முடனே எப்போதும் இருக்கிறார். நாம் தைரியமாக இருந்து அவர் கொடுக்கும் பெலத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இன்று நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதற்கான கிருபையை தேவன் உங்களுக்கு கொடுப்பாரென்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிராமல், இந்த பொழுதில் நாம் வாழ்வதில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானது.
இதே கருத்தை இன்னும் பல பகுதிகளுக்கும் பொருத்திக் கொள்ளலாம் – கடனிலிருந்து மீண்டு வருதல், உங்கள் வீட்டை சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்துவது, திருமண பிரச்சினைகளை தீர்ப்பது, உங்கள் பிள்ளைகளை கட்டுப்படுத்துவது, வேலைக்கு சரியான நேரத்திலே செல்வது அல்லது பிராஜக்டை சரியான நேரத்திலே முடிப்பது போன்ற காரியங்கள். வாழ்க்கையில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் உங்களால் செய்ய இயலும்.
பிலி 4:13 சொல்வதாவது, நீங்கள் எதற்காய் ஆயத்தமாயிருக்கிறீர்களென்றும், எதற்கும் சமமாயிருக்கிறீர்களென்றும் வேதம் கூறுகிறது. ஏனெனில் தேவன் உங்களுக்கு பெலனளிக்கிறார். அவர் உங்கள் பட்சமாக இருக்கையிலே எதுவும் உங்களுக்கு பெரிதாக இராது.
ஜெபம்
தேவனே, என் முன்னால் இருக்கும் சவால்கள் முடியாததாக தோன்றும் போது, நீர் என்னோடு இருப்பதால் நாள் ஒன்றிற்கு ஒன்றாக அவற்றை முறியடிக்க முடியும் என்று அறிந்திருக்கிறேன். இன்று நான் உம்முடைய பெலத்தைப் பெற்றுக் கொள்கிறேன்.