ஒரு நல்ல ஆண்டவர் ஏன் தீய காரியங்கள் நடைபெற அனுமதிக்கிறார்?

ஒரு நல்ல ஆண்டவர் ஏன் தீய காரியங்கள் நடைபெற அனுமதிக்கிறார்?

“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.” – யாக் 1:17

நாம் பயங்கரமான சோகத்தை அனுபவிக்கும் போது, கடவுள் மீது கோபப்படுவது பொதுவான பதிலாகும். மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள், “கடவுள் நல்லவர், எல்லாம் செய்ய வல்லவர், நம்மீது அன்பு நிறைந்தவர் என்றால், வலியை ஏற்படுத்திய காரியத்தை அவர் ஏன் நிறுத்தவில்லை?”

இங்கு தான் சாத்தான் கடவுளுக்கும், அந்த நபருக்கும் இடையில் ஒரு சுவரைக் கட்ட முற்படுகிறான். “கடவுள் நல்லவர் அல்ல, அவரை நம்ப முடியாது” என்று சொல்லும் வாய்ப்பை அவன் பயன்படுத்திக் கொள்கிறான். ஆயினும், கடவுளுடைய வார்த்தையின்படி நமக்குத் தெரியும், உண்மை சாத்தானில் இல்லை – அவன் ஒரு பொய்யன், பொய்களின் பிதா.

யாக்கோபு 1:17 – ஐ வாசியுங்கள். நல்லது எல்லாம் கடவுளிடமிருந்து வருகிறது. கடவுள் நல்லவர், அவர் வேறு மாதிரி இருக்க முடியாது. மேலும், அவர் மாறாதவராக இருகிறார்.. அவர் முற்றிலும் நிலையானவர், உண்மையுள்ளவர், சீரானவர். அவர் நல்லவர் – எல்லா நேரத்திலும்.

கடவுள் எப்போதும் சோகத்தை நிறுத்தமாட்டார் என்பது வெளிப்படையானது, ஏன் கெட்ட காரியங்கள் நடக்கின்றன என்பதை நாம் எப்போதும் அறிய மாட்டோம். 1 கொரி 13:12 …இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன்,… விசுவாசமானது நாம் எப்போதும் விடையளிக்கப்படாத கேள்விகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. எல்லாம் அறிந்த ஒருவரை நாம் அறிந்திருப்பதில் திருப்திபடும் ஒரு நிலைக்கு நாம் வந்து அவர் மேல் நம் நம்பிக்கையை வைக்க வேண்டும்.


ஜெபம்

கடவுளே, கெட்ட காரியங்கள் ஏன் நடக்கின்றன என்பதை நான் எப்போதும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் நீர் நல்லவர் என்று எனக்குத் தெரியும். ஏன் என்று எனக்கு புரியாதபோது, என் ஆறுதலை உம்மில் கண்டு கொள்வேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon