உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. (சங்கீதம் 119:105)
பரிசுத்த ஆவியானவர் அவருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் சீஷர்கள் மூலம் நமக்குக் கொடுக்கப்படும் கடவுளின் வார்த்தையை விட அப்பாற்பட்டது வேறு எதுவுமில்லை. நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் வேதத்தில் பதில் இருக்கிறது. கடவுளின் வார்த்தை, வாழ்க்கைக்கான கோட்பாடுகள், மனிதனுக்கு கடவுள் காட்டும் கிருபையின் உண்மைக் கதைகள் மற்றும் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தேவையான முக்கியமான உண்மைகளாலும், உவமைகளாலும் நிறைந்ததாய் இருக்கிறது.
வேதம் உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட கடிதம். நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அது நமக்குச் சொல்கிறது. ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்திலோ அல்லது வசனத்திலோ இல்லாத ஒன்றைக் கடவுள் நம்மிடம் பேசும் நேரங்கள் இருக்கலாம், ஆனால் அவர் உண்மையாகவே பேசினால், நாம் கேட்பது அவருடைய வார்த்தையுடன் எப்போதும் ஒத்துப்போகும். அவருடைய வார்த்தையின் மூலம் நாம் அவரைத் தேடும்போது, அவர் நம்மிடம் பேசி, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்மை வழிநடத்துவார். குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி நான் கடவுளிடமிருந்து கேட்க வேண்டியிருக்கும் சமயத்தில், நான் தேடும் பதிலைத் தெளிவாகத் தரும் வேதாகமத்தை அவர் அடிக்கடி எனக்கு நினைவூட்டுகிறார்.
நான் பரிசுத்த ஆவியின் முழுமையைப் பெற்றதிலிருந்து ஒவ்வொரு நாளும் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது (பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவது) எனக்கு இயல்பான வாழ்க்கை முறையாகிவிட்டது. கேட்கும் அனைவருக்கும் கடவுள் தம்முடைய ஆவியின் வரத்தை அளிக்கிறார் (காண்க லூக்கா 11:13), மேலும் பரிசுத்த ஆவியானவர் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள உதவுகிறார், இதன் மூலம் அவரின் ஞானத்தை நம் வாழ்வில் பயன்படுத்த முடியும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: கடவுளுடைய வார்த்தையை உங்களுக்காகவே எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதமாகப் படியுங்கள்.