ஒவ்வொருவரையும் வித்தியாசமாக நேசியுங்கள்

ஒவ்வொருவரையும் வித்தியாசமாக நேசியுங்கள்

“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” – சங்கீதம் 139:14

நாம் பிரமிக்கத்தக்க விதமாக உருவாக்கப்பட்டு இருக்கிறோம் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் நேரமெடுத்து தம் உருவாக்கும் திறனை நம் ஒவ்வொருவர் மீதும் வெளிப்படுத்தினார். இதனால் நம் ஒவ்வொருவரையும் ஒரே விதமாக உருவாக்கவில்லை என்பது தெரிகிறதல்லவா?

துரதிஷ்ட வசமாக சில சமயங்களில் பிறரை, அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்களே என்பதைப் போன்று நேசிக்க முயல்கின்றோம்.

எல்லோரும் உங்களிடமிருந்து ஒரே மாதிரியான காரியங்களை எதிர்பார்க்கவில்லை என்பதை காண்பீர்கள். உதாரணமாக, உங்கள் பிள்ளைகளில் ஒன்று மற்றொன்றை விட உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு நண்பருக்கு மற்றவரை விட அதிகமான உற்சாகம் அனுதினமும் தேவைப்படலாம். சிலருக்கு அன்பின் வேறு விதம் தேவைப்படலாம்.

தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களும், விருப்பங்களும் கூட மிகவும் முக்கியமானதாகும். சுயநலக்காரர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் போன்றே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் அன்பு மக்களிடம் இருக்கும் வேற்றுமைகளை மதிக்கின்றது. நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்பியிருப்பார் என்றால். ஒவ்வொருவருக்கும்

வேறுவிதமான விரல் தடயங்களை கொடுத்திருக்க மாட்டார். நாம் சமநிலையாக, ஆனால் வித்தியாசமாக படைக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை சில உண்மைகள் தான் நிரூபிக்கும் என்று நம்புகிறேன்.

நம் அனைவருக்கும் வித்தியாசமான நோக்கங்கள், தாலந்துகள், வித்தியாசமான விருப்பங்கள், வெறுப்புகள், தூண்டுதல்கள், இருக்கின்றன. அன்பான ஒருவர் பிறரிடமிருந்து வித்தியாசங்களை மதிக்கின்றார், உற்சாகப்படுத்துகிறார்.


ஜெபம்

தேவனே, பிறரிடம் இருக்கும் வித்தியாசங்களை பாராட்டவும், அவர்களை நேசிக்கவும் எனக்கு உதவுவீர். நாங்கள் அனைவரும் பிரமிக்கத்தக்க விதமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். என் வாழ்க்கையிலே நீர் கொடுத்திருக்கும் அற்புத படைப்பாகிய ஒவ்வொருவருக்காகவும் நன்றி செலுத்துகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon