“இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.” – சங்கீதம் 118:24
நம்முடைய அன்றாட சாதாரண வாழ்க்கையின் மத்தியில், மிக மோசமான நாட்களில் கூட நாம் சந்தோஷப்பட வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.
ஒவ்வொரு நாளையும் சந்திக்க பயப்பட்ட நாட்கள் என் வாழ்க்கையில் இருந்தது. எனது சூழ்நிலைகளைப் பற்றியே நான் யோசிக்க முடிந்தது. டேவும், நானும் எப்படி பில்களை செலுத்தப் போகிறோம் அல்லது நாங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும், செய்து முடிக்கப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். சில நேரங்களில் நான் என் தலைக்கு மேல் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு படுக்கையில் இருக்கவே விரும்பினேன். நான் கவலையில் மூழ்கியிருந்தேன்.
கடவுள் ஒரு புதிய நாளை உருவாக்கியுள்ளார், நான் அதை அனுபவிக்கவே அவர் அதை உருவாக்கினார் என்ற உண்மையை உணராத அளவிற்கு கவலையில் மூழ்கி இருந்தேன்.
ஒவ்வொரு நாளும் உங்களை வருத்தப்படுத்தக்கூடிய அனைத்து வகையான சூழ்நிலைகளாலும் நிரம்பியுள்ளது. உங்கள் கார் சாவியை இழப்பது அல்லது போக்குவரத்து நெரிசலில் சிக்குவது போன்றவை. ஆனால் அவைகளின் மத்தியில் சமாதானமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருப்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
நம் மனதையும், சூழ்நிலையையும் விலக்கி, கடவுளின் மீதும் மற்றவர்களை நேசிப்பதிலும் நம் கவனத்தை செலுத்தும்போது, நாம் அவரை கனப்படுத்தும் ஒரு மனப்பான்மையை பெற்றுக் கொள்ளவும், ஒவ்வொரு புதிய நாளையும், கடவுளிடமிருந்து கிடைத்த ஒரு அற்புதமான புதிய பரிசாக பார்க்க நமக்கு உதவும்.
ஜெபம்
கடவுளே, ஒரு புதிய நாளின் ஈவுக்காக உமக்கு நன்றி. வாழ்க்கையில் வெறுப்பூட்டும் விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நான் உம்முடன் சமாதானமாகவும், மகிழ்வுடனும் இருப்பதை தெரிந்து கொள்கிறேன்!