“ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.” – ரோமர் 13:8
நம்முடைய பொருளாதாரத்திற்கான போராட்டம், உண்மையிலேயே ஆவிக்குறிய போராட்டம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நம்மால் இயன்றதற்கு மேல் நாம் செலவு செய்ய வேண்டுமென்று சத்துரு நம்மை சோதிக்கின்றான். இதனால் அவன் நம்மை அழுத்தத்திற்குள்ளாக்கி தேவனுடனான நம் நடையிலிருந்து நம்மை கவனம் சிதற செய்ய வேண்டுமென்று விரும்புகிறான்.
ஆனால் இயேசு நாம் அனுபவிக்க வேண்டுமென்று நமக்காக மரித்து, அவர் அளித்திருக்கும் வாழ்வை அனுபவிப்பதை நம் இலட்சியமாக்கிக் கொள்ள வேண்டும் – பரிசுத்த ஆவியானவருக்குள்ளே, நீதியான, சமாதானமான, சந்தோசமான வாழ்வை. நாம் மன அழுத்தத்திற்குள்ளும், பொருளாதார கடனிலும் இருப்போமென்றால் அப்படியாக நாம் அனுபவிக்க இயலாது.
பணத்தை கையாளுவதில் நாம் வேதாகம அடிப்படைகளை உபயோகிப்போமேயென்றால் கடன் இன்றி வாழலாம். என் கணவராகிய டேவ் சொல்வதென்னவென்றால் நாம் நம் வருமானத்திற்கு ஏற்ப நம் எல்லைகளுக்குள் வாழக் கற்றுக் கொள்வோமேயென்றால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பார். நம் எல்லைகள் விரிவாக்கப்படும். நமக்கு அதிகம் நிலைத்திருக்கும். லூக்கா 9:17 சொல்கிறதாவது, நாம் கொஞ்சத்திலே உண்மையாக இருப்போமேயென்றால் தேவன் அதிலே பிரியம் வைக்கிறார். அப்படியிருப்போமேயென்றால், பெரிய காரியங்களின் மேல் அதிகாரம் கொடுப்பாரென்று வேதம் சொல்கிறது.
எனவே தேவன் உங்களிடம் ஒப்படைத்ததற்கும் ‘மேலாக’ வாழ முயற்சி செய்யும் வலைக்குள்ளே விழுந்து விடாதீர். உங்கள் எல்லைக்குள்ளேயிருந்து கடனின்றி வாழுங்கள்…பின்னர் தேவன் அவைகளை விரிவாக்குவார்.
ஜெபம்
தேவனே, என்னுடைய பொருளாதரத்திலே இருக்கும் ஆவிக்குறிய போரை ஜெயிக்க விரும்புகிறேன். எனவே கடனிலே வாழ மறுக்கிறேன். என்னிடம் இல்லாதவற்றிற்காக செலவு செய்யும் சோதனைக்குட்பட மாட்டேன். மாறாக எனக்கு நீர் கொடுத்திருக்கும் எல்லைகளுக்குள் உண்மையாக இருப்பேன்.