கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4)
கடவுள் நம்மிடம் பேசும் வழிகளில் ஒன்று, நம் இருதயத்தின் பரிசுத்தமான ஆசைகள் மூலமாகும். கடவுள் நம் இருதயங்களில் சரியான ஆசைகளை வைக்கிறார், பின்னர் அவர் அந்த ஆசைகளை நமக்கு நிறைவேற்றித் தருகிறார். எனக்கு, வீட்டில் செய்த சுரைக்காய் ரொட்டி மீது ஆசை இருந்தது, ஆனால் அதைச் செய்ய திறமையும், நேரமும் இல்லாத ஒரு காலம் எனக்கு நினைவிருக்கிறது. நான் வெறுமனே சொன்னேன், “ஆண்டவரே, நான் நிச்சயமாக கொஞ்சம் புதிய சுரைக்காய் ரொட்டியை விரும்புகிறேன்” என்று. மீண்டும் அதைப் பற்றி யோசிக்கவில்லை. ஒரு வாரம் கழித்து, என் ஆசை எதுவும் தெரியாத ஒரு பெண் என்னிடம் ஒரு பெட்டியைக் கொடுத்தாள், நான் அதைத் திறந்தபோது, வீட்டில் செய்யப்பட்ட சுரைக்காய் ரொட்டியைக் கண்டேன். நமக்காக சிறிய மற்றும் பெரிய காரியங்களைச் செய்வதில் கடவுள் மகிழ்ச்சியடைகிறார், அவை அனைத்தையும் நாம் பாராட்டத் தவறக்கூடாது.
பரிசுத்தமான ஆசைகளை நமக்குக் கொடுக்கும்படி நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். நாம் பொதுவாக வெற்றி, நிதி, நல்ல வீடு மற்றும் நல்ல உறவுகள் போன்ற இயற்கையான விஷயங்களில் ஆசைப்படுகிறோம், ஆனால் நாம் ஆவிக்குறிய விஷயங்களையும் விரும்ப வேண்டும். நாம் கடவுளை ஆழமான மற்றும் நெருக்கமான வழியில் அறிந்துகொள்ள விரும்ப வேண்டும், எப்போதும் ஆவியின் கனியைக் காட்ட வேண்டும், குறிப்பாக அன்பாக இருக்க வேண்டும். கடவுளை மகிமைப்படுத்தும் வழிகளில் சேவை செய்ய வேண்டும், கடவுளுக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும். மாம்சீகமான ஆசையை நீக்கி, பரிசுத்தமான ஆசையை நமக்குத் தரும்படி கடவுளிடம் வேண்டுவோம்.
தேவன் நம் வாழ்வில் அவருடைய நீதி, சமாதானம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும் ஆசைகளை நம்மில் வைக்கிறார் (ரோமர் 14:17 ஐப் பார்க்கவும்), அவைகள் அவருடைய வார்த்தையுடன் ஒருபோதும் உடன்படாமல் போவதில்லை. தவறான ஆசைகள் நம்மைத் துன்புறுத்துகின்றன, அவற்றைப் பெறுவதில் நாம் பொறுமையற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் பரிசுத்தமான ஆசை, கடவுளின் வழிகளிலும், நேரத்திலும் காத்திருக்கும் விருப்பத்துடன் வருகிறது.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் ஆசைகளை கடவுளுக்கு முன்பாக வைக்கவும், அவற்றைப் பற்றி ஜெபிக்கவும், அவை உங்களுக்கு சரியானதாக இருந்தால், அவற்றை உங்களுக்குக் கொடுப்பார் என்று கடவுளை நம்புங்கள்.