கடவுளில் நிலைத்திருங்கள்

கடவுளில் நிலைத்திருங்கள்

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோவான் 15:7)

இன்றைய வசனம், நாம் “விரும்பினால்” எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும், நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் அது நமக்காகச் செய்யப்படும் என்றும் கூறுகிறது. நாம் அவரில் முதிர்ச்சியடையும் போது, கடவுளின் விருப்பங்களுடன் நமது ஆசைகள் ஒன்றிணையச் செய்வது தான் இதற்கு சாத்தியமான ஒரே வழி.

ஒவ்வொரு உண்மையான விசுவாசியின் குறிக்கோள், கடவுளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது. நாம் மறுபடியும் பிறக்கும் போது, இது ஆவிக்குறிய ரீதியில் நிகழ்கிறது. மேலும் நாம் அவரில் தொடர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடையும் போது, இது மனம், சித்தம் மற்றும் உணர்ச்சிகளில் நிகழ்கிறது. அவ்வாறு செய்யும் போது, நமது ஆசைகள் அவருடைய விருப்பங்களாக மாறி, அவற்றைப் பின்பற்றுவதில் நாம் பாதுகாப்பாக இருப்போம்.

டேவிற்கும், எனக்கும் எங்கள் ஊழியத்திற்கு கிடைத்த அழைப்பு இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாங்கள் ஊழியத்தில் இருக்க வேண்டும் என்பதும், மக்களுக்கு உதவ அவர் நமக்கு அளித்துள்ள வழிகளில் உதவ வேண்டும் என்பதும் கடவுளின் விருப்பம். அதுவே எங்கள் மனதின் ஆசையாகவும் இருந்திருக்கிறது. ஊழியம் செய்ய வேண்டும் என்ற எங்களது விருப்பம் கடவுளால் கொடுக்கப்படவில்லை என்றால், ஒவ்வொரு வார இறுதியிலும் பயணம் செய்வதிலும், ஹோட்டல்களில் தங்கியிருப்பதிலும், குடும்பத்தை விட்டு விலகியிருப்பதிலும் பல வருடங்கள் செலவழித்திருக்க முடியாது. அவர் எங்களுக்குள், ஊழியம் செய்வதற்கு ஒரு வலுவான விருப்பத்தை வைத்துள்ளார். அதனால் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு தேவையான எந்த தியாகத்தையும் செய்ய அல்லது எங்களுக்கு எதிராக வரக்கூடிய எந்தவொரு எதிர்ப்பையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கடவுளுடன் நிலைத்திருப்பது என்பது அவருடன் “கூட” இருப்பது, அவருடன் நேரத்தை செலவிடுவது, அவருடைய முன்னிலையில் வாழ்வது மற்றும் அவர் நம் இருதயங்களில் வைக்கும் ஆசைகளை வளர்ப்பது. ஏனென்றால் அதுவே நமக்கான அவருடைய விருப்பம். அவர் நம்மிடம் பேசுகிறார், நம் இருதயங்களில் ஆசைகளை வைக்கிறார், அதனால் அவர் நமக்குத் தர விரும்புகிறவற்றை ஜெபித்துக் கேட்போம். நம்முடைய ஆசைகள் அவருடைய விருப்பங்களாக இருக்கும் வரையிலும், நாம் அவரில் நிலைத்திருக்கும் வரையிலும் அவர் நமக்கு உண்மையுள்ளவராக இருப்பார்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: இன்று கடவுளுடன் “கூட” இருங்கள்; அவர் ஒரு சிறந்த துணை.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon