கடவுளுடைய இரகசியங்களைக் காத்துக்கொள்ளுங்கள்

கடவுளுடைய இரகசியங்களைக் காத்துக்கொள்ளுங்கள்

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். (மத்தேயு 6:6)

இரகசியமாக வைக்கப்பட வேண்டிய விஷயங்களை இரகசியமாக வைத்திருப்பதில் நாம் மிகவும் நல்லவர்கள் அல்ல என்பதை நான் கடவுளுடனான எனது அனுபவத்தில் பல ஆண்டுகள் கழித்து உணர்ந்தேன். இன்றைய வசனம், நாம் ஜெபிப்பது நமக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ளது என்றும் அதை மற்றவர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது. நாம் கடவுளிடமிருந்து கேட்க விரும்புகிறோம், ஆனால் அவர் நமக்கு எதை சொல்கிறார் என்று நாம் உணரும் தருணத்தில், அவர் சொன்னதை மற்றவர்களுக்குச் சொல்ல நம்மால் காத்திருக்க முடியாது. ஒருவேளை அது சில சமயங்களில் சரியாக இருக்கலாம், ஆனால் நமக்கும், கடவுளுக்கும் இடையிலான விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய நேரங்களும் உள்ளன.

யோசேப்பு தன் தந்தையும், சகோதரர்களும் என்றாவது ஒரு நாள் தலைவணங்குவார்கள் என்று கனவு கண்டபோது, ஒருவேளை குழந்தைத்தனமான அவனின் முட்டாள்தனம், அதைப் பற்றி அவர்களிடம் சொல்லத் தூண்டியது. ஒருவேளை அந்த முட்டாள்தனத்தைத்தான், யோசேப்பிடம் ஒரு பொறுப்பை கொடுப்பதற்கு முன், அவனிடமிருந்து, கடவுள் எடுக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும், ரகசியங்களை வைத்திருக்க விரும்பாதது முதிர்ச்சியடையாததன் அறிகுறியாகும். இன்றைக்கு வசனம் கூறுவது போல், எதைச் சொல்ல வேண்டும், எதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான வித்தியாசத்தை நாம் அறிந்துகொள்ளக் கற்றுக்கொண்டால், நம் வாழ்வில் கடவுளின் பலன்கள் வெளிப்படுவதை நாம் நன்றாகக் காணலாம் என்று நினைக்கிறேன்.
கடவுள் நம்மை நம்பினால் இன்னும் அதிகமாக வெளிப்படுத்துவார். அவற்றை விடுவிக்க கடவுள் நமக்கு அனுமதி கொடுக்கும் வரை நம் இருதயத்தில் விஷயங்களை வைத்திருக்க கற்றுக்கொள்வோம்.


இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: உங்கள் உணர்ச்சிகள் தூண்டப்படும்போது, நீங்கள் சொல்வதில் கவனமாக இருங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon