என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள். (எரேமியா 2:13)
கடவுளை கைவிடுவது அல்லது புறக்கணிப்பது அல்லது அவர் இல்லாதது போல் செயல்படுவது எவரும் செய்யக்கூடிய முதல் மற்றும் மிகப்பெரிய தவறு. இன்றைய வசனத்தில் இஸ்ரவேல் ஜன்ங்கள் இதைத்தான் செய்தார்கள். இந்த வசனம் உள்ள அதே அத்தியாயத்தில், கடவுள் கூறுகிறார், “என் ஜனங்கள் எண்ணற்ற நாட்களாய் என்னை மறந்து விட்டார்கள்” (எரேமியா 2:32). என்ன ஒரு சோகம்; கடவுள் சோகமாகவோ அல்லது தனிமையாகவோ இருப்பது போல் தெரிகிறது.
என் பிள்ளைகள் என்னை மறந்தால் நிச்சயமாக நான் விரும்பமாட்டேன். ஒவ்வொருவரிடமும் பேசாமல் நான் பல நாட்கள் இருந்ததில்லை. எனக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் ஊழியத்தில் அதிகமாக பயணம் செய்கிறார். அவர் வெளிநாட்டில் இருந்தாலும், சில நாட்களுக்கு ஒருமுறை என்னிடம் தொலைபேசியில் பேசுவார்.
டேவும், நானும் எங்கள் மகன்களில் ஒருவருடன் இரண்டு மாலைகள் தொடர்ச்சியாக இரவு உணவு சாப்பிட்ட நேரம் எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் அடுத்த நாள், நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்கவும், அடுத்த நாள் மாலை ஒன்றாக ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கவும் அவர் அழைத்தார். அவருக்கும் அவருடைய மனைவிக்கும் எல்லா விஷயங்களையும் உண்மையிலேயே நாங்கள் உதவியாய் இருக்கிறோம் என்று பாராட்ட அழைத்தார்.
நல்ல உறவுகளை கட்டியெழுப்பவும், பராமரிக்கவும் உதவும் விஷயங்கள் இவை. சில நேரங்களில் சிறிய விஷயங்கள் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். என் குழந்தைகளின் செயல்கள் அவர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்பதை எனக்குத் தெரிவிக்கின்றன. அவர்கள் என்னை நேசிக்கிறார்கள் என்று என் மனதிற்கு தெரிந்தாலும், அவர்களின் அன்பை உணருவது நல்லது.
அவருடைய அன்புக் குழந்தைகளாகிய நம்மோடும், தேவன் அப்படித்தான் இருக்கிறார். நாம் அவரை நேசிக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆனால் நம் செயல்களின் மூலம் நாம் அவர் மீது கொண்டிருக்கும் நம் அன்பை அனுபவிக்க விரும்புகிறார். குறிப்பாக அவரை நினைவுகூருதல் மற்றும் அவருடன் நேரத்தை செலவிட விருப்பம்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்களைப் பற்றி கவலைப்படுகிறார், எனவே எதையும் அவருடன் பேச தயங்காதீர்கள்.