ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. (சங்கீதம் 20:1)
நீங்கள் எப்போதாவது ஒரு உறவில் இருந்திருந்தால், உங்கள் பணத்தை நிர்வகிக்க முயற்சித்திருந்தால், ஒரு வேலையைச் செய்திருந்தால், உங்கள் வாழ்க்கைக்கான கடவுளுடைய நோக்கத்தைக் கண்டுபிடித்து நிறைவேற்ற முயற்சித்திருந்தால் அல்லது ஆவிக்குறிய ரீதியில் வளர முயற்சித்திருந்தால், ஒருவேளை சில பிரச்சனைகளை நீங்கள் சந்தித்திருக்கலாம். பிரச்சனைகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும், நீங்கள் ஒரு பிரச்சனையிலிருந்து விடுபடும் போது, அதற்குப் பின்னால் இன்னொரு பிரச்சனை இருக்கும்! இது நம் அனைவருக்கும் உண்மை, எதிர்கொள்வதற்கும், தாங்குவதற்கும், உறுதியுடன் இருப்பதற்கும், வெற்றியில் வாழ்வதற்கும், நாம் நம் திறன்களை வளர்த்து முதிர்ச்சியடையச் செய்தாலும், நாம் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையுடன் போராடிக் கொண்டே இருப்போம்.
வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு கடவுளிடம் மட்டுமே தீர்வு உள்ளது. நம் பிரச்சினைகளுக்கு நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியம், அவற்றை அவரிடம் கொடுப்பதாகும். நாம் அவற்றை நம் மனதில் ஒத்திகை பார்ப்பதை விட்டு விட வேண்டும். அவற்றைப் பற்றி பேசுவதை விட்டு விட வேண்டும். அவற்றைப் பற்றி கவலைப்படுவதை விட்டு விட வேண்டும். மேலும் வாழ்க்கையின் அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் கடவுளிடம் கொடுத்து விட்டு, எல்லாவற்றையும் அவர் செய்ய அனுமதிக்க வேண்டும். நம் மன அழுத்தங்களையும், சூழ்நிலைகளையும் கடவுளிடம் ஒப்படைக்கக் கற்றுக்கொண்டால், நம் வாழ்க்கையை நாம் அதிகமாக அனுபவிப்போம். சுற்றி நடப்பது மிகவும் சந்தோசமாக இருக்கும், மேலும் நாம் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருப்போம்.
வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு போராடி நாம் செய்வதை விட, கடவுளால் ஒரு நொடியில் அதை விட அதிகமாக செய்ய முடியும். அவர் ஒரு நொடியில் உங்களுடன் பேசி, சூழ்நிலையை முழுவதுமாக மாற்ற முடியும்; அவரிடமிருந்து வரும் ஒரு வார்த்தை, எல்லாவற்றையும் தீர்க்க முடியும். கடவுளால் சாதிக்க முடியாத அளவுக்குப் பெரியது ஒன்றும் இல்லை, மேலும் அவர் கவலைப்படுவதற்கு ஒரு சிறிய விஷயம் கூட இல்லை. அவர் உங்களைப் பற்றி கவலைப்படுகிறார். எனவே உங்கள் பிரச்சினைகளை அவரிடம் கொடுங்கள். உங்களுக்குத் தேவையான தீர்வுகளை அவர் உங்களுக்கு வழங்கட்டும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: உங்கள் பிரச்சினைகளை கடவுளிடம் கொடுங்கள், உங்களுக்கு தீர்வுகளை வழங்க அவரை அனுமதிக்கவும்.