கடவுள் உங்களை வாழ்க்கைக்கு நேராய் நடத்தட்டும்

கடவுள் உங்களை வாழ்க்கைக்கு நேராய் நடத்தட்டும்

நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு. (உபாகமம் 30:19)

யோவான் 16:8 இல், பரிசுத்த ஆவியானவர், பாவம் மற்றும் நீதியைக் குறித்து இந்த உலகத்தை “கண்டித்து உணர்த்துவார்” என்று இயேசு கூறினார். பரிசுத்த ஆவியானவர் கண்டனம் செய்வார் என்று அவர் சொல்லவில்லை. அவர் பாவத்தைப் பற்றியும் நீதியைப் பற்றியுமான அறிவைக் கொண்டு வருவார் என்றார்.

பரிசுத்த ஆவியானவர் பாவத்தின் முடிவுகளையும், நீதியின் விளைவுகளையும் வெளிப்படுத்துகிறார். அதனால் மக்கள் எந்தப் பாதையை பின்பற்ற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சரி மற்றும் தவறு, ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள், வாழ்க்கை மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை அவர் தெளிவாகக் காட்டுகிறார். அதனால் மக்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க கடவுளிடம் கேட்கலாம். பாவத்தில் வாழ்பவர்கள் கேவலமான, அவலமான வாழ்க்கை வாழுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு எனக்குத் தெரிந்தவர்களையும், சில காலமாகப் பார்க்காதவர்களையும் நான் அவ்வப்போது சந்திக்கிறேன். இவர்களில் சிலர் கடவுளுக்காக வாழவில்லை. அவர்கள் தேர்ந்தெடுத்த கடினமான, முரட்டுத்தனமான வாழ்க்கை முறைகள் அவர்களைப் பாதித்துள்ளன. அவர்கள் செய்த கசப்பான, சோகம் மற்றும் பரிதாபகரமான தேர்வுகள் வெளியரங்கமாக தெரிந்தது. ஏனென்றால் பாவம் அவர்களை சோகமாகவும், பெரும்பாலும் அவர்களை விட வயதானவர்களாகவும் தோற்றமளிக்க செய்திருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியற்றவர்களாகவும், எதிர்மறையானவர்களாகவும், அதிருப்தி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர்கள் செய்த தவறான தேர்வுகளின் நேரடி விளைவால் தான் தங்கள் வாழ்க்கை இப்படி ஆனது என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள்.

பாவத்தின் பலன் எல்லா இடங்களிலும் காணப்படும். கடவுளை நேசிப்பவர்களுக்கும், சேவை செய்பவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள கோடு மிகவும் தெளிவாகத் தெரியும். சரியான தெரிவுகளைச் செய்யும்படி கடவுள் நம்மிடம் மன்றாடுகிறார். அது நாம் அனுபவிக்க, அவர் விரும்பும் வாழ்க்கையில் நம்மை வழிநடத்தும். நம் ஒவ்வொருவருக்கும் முன்னால் இரண்டு பாதைகள் உள்ளன: பாவத்திற்கும் அழிவுக்கும் வழிவகுக்கும் ஒரு பரந்த பாதை மற்றும் வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு குறுகிய பாதை (மத்தேயு 7:13-14 ஐப் பார்க்கவும்). இன்றும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: நல்ல தேர்வுகள் நல்ல வாழ்க்கையாக மாறும்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon