
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? (சங்கீதம் 42:1-2)
நான் அவரை உண்மையாக நேசித்தாலும், கடவுள் என்னிடம் பேச விரும்புகிறார் என்பதை அறியாமல் பல ஆண்டுகளாக நான் தேவாலயத்திற்குச் சென்றேன். நான் மதம் சம்பந்தப்பட்ட எல்லா விதிகளையும், நாட்களையும் கடைப்பிடித்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் சென்றேன். அந்த நேரத்தில் எனக்கு செய்யத் தெரிந்த அனைத்தையும் நான் செய்தேன். ஆனால் கடவுளுக்கான என் ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய அது போதுமானதாக இல்லை.
நான் ஒவ்வொரு கணத்தையும் தேவாலயத்திலோ அல்லது வேதம் வாசிப்பதிலோ செலவழித்திருக்கலாம். ஆனால் அது இறைவனுடன் ஆழமான உறவுக்கான என் தாகத்தைத் தணித்திருக்காது. எனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம் பேசவும், என் எதிர்காலத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசுவதைக் கேட்கவும் வேண்டியிருந்தது. ஆனால் கடவுள் என்னிடம் நேரடியாகப் பேச விரும்புகிறார் என்று யாரும் எனக்குக் கற்பிக்கவில்லை. எனது ஆவிக்குறிய ஏக்கத்திற்கு யாரும் தீர்வு சொல்லவில்லை.
வேதத்தைப் படிப்பதன் மூலம், கடவுள் நம்மிடம் பேச விரும்புகிறார். அவருடைய பிரசன்னம் மற்றும் நம் வாழ்வில் தொடர்பு கொள்வதற்கான நமது ஏக்கங்களைத் திருப்திப்படுத்த விரும்புகிறார் என்பதை நான் கற்றுக்கொண்டேன். அவர் நம் வாழ்க்கைக்கான திட்டங்களை வைத்திருக்கிறார்—அது நம்மை அமைதி மற்றும் மனநிறைவுக்கு இட்டுச் செல்லும் திட்டங்கள். மேலும் தெய்வீக வழிகாட்டுதலின் மூலம் அவரைப் பற்றியும் அவருடைய சித்தத்தைப் பற்றியும் நாம் அறிவையும் புரிதலையும் பெற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
கடவுள் உங்களைப் பற்றி கவலைப்படுகிறார். அவருடைய திட்டம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நெருக்கமாக ஈடுபடுவதாகும். இந்த உண்மையை அறிந்ததும், அவருடனான எனது பயணம் ஒரு மதம் சார்ந்த கடமையாக இல்லாமல், இனிமையாக மாறிவிட்டது.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: இன்று உங்கள் அமைதியான நேரத்தின் ஒரு பகுதியை அமைதியாகச் செலவிடுங்கள்! அமைதியாக இருங்கள் மற்றும் கடவுள் உங்களுக்கு என்ன கொடுக்க விரும்புகிறார் என்பதை கேளுங்கள்.