
ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். (மல்கி 3:2)
கடவுள் தம்முடைய சுத்திகரிப்பு அக்கினியைப் பயன்படுத்தி நம்மை மாற்றி, அவர் விரும்பும் மனிதனாக நம்மை உருவாக்குகிறார். அப்படி நம்மை மாற்றுவது எளிதல்ல என்பதை நான் உணர்கிறேன். நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கடவுளுடைய வார்த்தையைப் படித்து வருகிறேன். இன்னும் நான் பல காரியங்களில் நான் வேலை செய்ய வேண்டும் மற்றும் சில வழிகளில் என்னை மாற்ற கடவுளை அனுமதிக்க வேண்டும். நான் இன்னும் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை, ஆனால் நான் இருந்த இடத்தில் நான் இல்லை. அதற்கு நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
கடவுளின் சுத்திகரிப்பு நெருப்பு நம்மில் மாற்றப்பட வேண்டிய ஒரு நடத்தையை வெளிப்படுத்தும் போது நாம் பிடிவாதமாக இருந்தால் அல்லது மனந்திரும்ப விரும்பவில்லை என்றால், அன்பு பிடிவாதமாகிறது. அதை இப்படி விவரிக்கிறேன். கடவுள் அன்பு என்றும், அவர் பொறாமை கொண்ட கடவுள் என்றும் நாம் அறிவோம். அவருக்குரிய இடத்தை நம்மில் எதுவும் ஆக்கிரமிக்க அவர் விரும்பவில்லை. மேலும் கடவுளே, பொறாமை கொண்டவராகவும், பிடிவாதமாகவும் இருப்பார். அவர் தனது வழியை நம்மில் பெறும் வரை நம்முடனேயே இருப்பார். அன்பு (கடவுள்) நாம் பார்க்க விரும்பாத விஷயங்களைக் காண்பிக்கும்.
நெருப்பு அனைத்து அசுத்தங்களையும் விழுங்குகிறது மற்றும் கடவுளின் மகிமைக்காக எஞ்சியிருக்கும் அனைத்தையும் விட்டு விடுகிறது. பழைய ஜாய்ஸ் மேயர் பல ஆண்டுகளாக கடவுளின் சுத்திகரிப்பு நெருப்பில் எரிக்கப்பட்டார். இது நிச்சயமாக எளிதானது அல்ல, ஆனால் அது நிச்சயமாக மதிப்புக்குரியது.
கடவுளின் சுத்திகரிப்பு நெருப்பு உங்களுக்கு வெவ்வேறு வழிகளில் வரலாம். நீங்கள் செய்வதை நிறுத்தி விட்டு வேறு எதையாவது செய்யத் தொடங்குங்கள் என்று உங்கள் இருதயத்தில் ஒரு நெருடல் இருக்கலாம்; அவருடைய வார்த்தையின் மூலம் அவர் உங்களிடம் பேசும் போது நீங்கள் அதை உறுதியாக உணரலாம்; அல்லது நீங்கள் அவருடைய ஆவியிலிருந்து நேரடியாக உங்கள் ஆவியில் கேட்கலாம். அது எப்படி வந்தாலும், கடவுள் தனது சுத்திகரிப்பு நெருப்பை உங்கள் வாழ்க்கையில் கொண்டு வருவார். சுத்திகரிப்பு வரும் போது அதை எதிர்க்காமல் கடவுளை நம்பி நெருப்பு வேலை செய்யட்டும் என்று அவரிடம் விட்டு விடுங்கள்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுள் உங்களை தினமும் மாற்றுகிறார். இன்று, நீங்கள் நேற்று இருந்ததை விட சிறப்பாக இருக்கிறீர்கள்.