கடினமான தீர்மாணங்களை எடுத்தல்

“நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.” – எபி 4:15

சரியான தேர்வுகளை செய்வது, விஷேசமாக மனக் காயங்கள், சோர்வு, கடினமாக தோன்றும் சமயம், விரக்தி, குழப்பம் போன்றவற்றின் மத்தியிலே சரியான தேர்வுகளை செய்வது முக்கியமானதாகும். காரியங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் போது அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமலிருக்கும் பாதையை எடுப்பது இயல்பானதே. அத்தகைய தருணங்களில் சரியான தேர்வுகளை செய்வது மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றது. ஏனென்றால் வாழ்க்கையிலே சரியான பலனை அறுக்க உங்களுக்கு தோன்றாமலிருக்கும் போது சரியானதை செய்ய வேண்டும்.

என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குவது என்னவென்றால், நாம் எப்படி உணர்கிறோம் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அவர் மனிதனாக மாறிய போது, நாம் போராடிக் கொண்டிருக்கும் அனைத்துக்கும் அவரும் போராடினார். அதை விட்டு விட்டு சுலபமான பாதையை தெரிந்து கொள்ள வேண்டுமென்று உணர்ந்தார். ஆனால் அதை மேற்கொண்டு கடினமான தேர்வுகளை தெரிந்து கொண்டார்.

நாம் களைத்துப் போய் நம் தீர்மாணத்திலே தடுமாறும் போது நாம் உறுதியாக, எதனூடே சென்று கொண்டிருக்கிறோமோ அதைப் பற்றி அறிந்திருக்கும் ஒரு தேவனை சேவிக்கிறோம் என்பதை அறிந்திருக்கலாம். நாம் நாமாகவே கடினமான தீர்மாணங்களை எடுக்காத படி அவர் நமக்கு உதவவும், தம் கிருபையை அளிக்கவும் விரும்புகிறார்.

நீங்கள் மன அழுத்தத்திற்குள்ளாக இருந்தாலோ அல்லது அதை விட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டு இருந்தாலோ, தேவன் உங்களுடன் இருக்கிறார், உங்களை புரிந்து கொள்கிறார் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள். கடினமான தேர்வுகளை செய்ய அவருக்குள் பெலத்தைக் கண்டறியுங்கள்.

ஜெபம்

தேவனே, நான் எதனூடாக சென்று கொண்டிருக்கிறேனோ, எதனோடு போராடிக் கொண்டிருக்கிறேனோ அதை நீர் புரிந்து கொள்கிறதற்காக மகிழ்ச்சி அடைகிறேன், நன்றியோடிருக்கிறேன். நான் எதிர்ப்புகளில்லாத பாதையை தெரிந்து கொள்ளும் போதும், சோதிக்கப்படும் போதும், கடினமான தேர்வுகளை செய்யும் போதும் உம்மிலே என் பெலத்தைக் காண்பேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon