களைப்படையாமல் நேசித்தல்

களைப்படையாமல் நேசித்தல்

“அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்., குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார்.” – சங்கீதம் 146:7-9

வேதம் பல இடங்களில் ஒடுக்கப்பட்டவர்கள், பசியுற்றோர், விதவைகள், திக்கற்றவர்கள், அநாதைகளுக்காக நாம் கொண்டிருக்க வேண்டிய பொறுப்பை பற்றி பேசுகிறது. தணிமையாயிருப்பவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், மறக்கப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்களைக் குறித்து வேதத்தில் தேவன் குறிப்பிடுகின்றார். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், பசித்தவர்களுக்காகவும் அதிக கரிசனையுள்ளவராக இருக்கிறார்.

மக்கள் அனேக வழிகளிலே பசியுற்றவர்களாக இருக்கலாம். அவர்களிடம் உண்பதற்கு எந்தக் குறைவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் விஷேசித்தவர்களாகவும், நேசிக்கப்பட்டவர்களாகவும் உணருவதற்கு காத்திருப்பார்கள். துக்கத்தினால் குனிந்திருப்பவர்களை உயர்த்துகிறார். அன்னியர்களை அவர் பாதுகாத்து, தகப்பனற்றவர்கலையும், விதவைகளையும் தாங்குகிறார். இதை அவர் எப்படி செய்கிறார்? அவர் மனிதர்கள் மூலமாக கிரியை செய்கிறார். அவருக்கு பிறரின் தேவைகளை சந்திக்க, அர்ப்பணிக்கப்பட்டவர்கள் தேவை.

அன்னை தெரசா ஒருமுறை ‘அன்பு உண்மையாக இருக்க, அசாதாரண்மானதாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம்’ என்றார். நமக்கு தேவையானதெல்லாம், களைப்படைந்து போகாமல் நேசிப்பதாகும்.

அனுதினமும் நாம் சந்திக்கும் அனேகர், அவர்களை யாரோ ஒருவர் மீட்கும் வரை பிழைத்திருக்க விரும்புகின்றனர். அந்த யாரோ ஒருவர் நீங்களாகவோ, நானாகவோ இருக்கலாம். தேவனுடைய அன்பு நம்மூலமாக உடைக்கப்பட்டிருப்பவர்களிடமும், மனக்காயமடந்திருப்பவர்களிடமும் கிரியை செய்ய அனுமதிப்போமாக. ஆவிக்குறிய ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், சரீரப்பிரகாரமாகவும் மனக்காயமடைந்திருப்போரின் தேவைகளை சந்திப்போமாக. களைப்படையாமல் நேசிப்போமாக.

ஜெபம்

பரிசுத்த ஆவியானவரே, களைப்படைந்து போகாமல் நேசிக்க என்னை பெலப்படுத்துவீராக. தேவையிலிருப்பவர்களுக்கும், மனக்காயமடைந்தவர்களுக்கும் அவர்களின் தேவைகளை எப்படி சந்திப்பது என்பதை எனக்கு காட்டுவீராக.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon