“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” – மத்தேயு 6:33
சாத்தானின் அதிக தந்திரமான ஆயுதங்களில் ஒன்று கவன சிதறல் ஆகும். நாம் உலக கவலையினால் பிடிக்கப்படும் போது, தேவனுடனான நம் நேரத்தை புறக்கணித்து விடுவோம் என்று அறிவான்.
நம்மை தேவனுடன் நெருங்கிய, ஐக்கியத்திலும், அந்நியோன்னியத்திலும், ருந்து பிரிக்கும் கவனச் சிதறல்களை, அவை வேதனை அளித்தாலும் கூட புறம்பாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
உதாரணமாக, தேவனைப் பிரியப்படுத்துவதை விட நம் உத்தியோகமும், பண ஆசையும், உயர்ந்த சமூக அந்தஸ்தும் நமக்கு அதிக முக்கியமாக விடும் என்றால் நாம் நம்முடைய முன்னுரிமைகளை நேராக்க வேண்டும்.
இல்லை என்றால் ஒருவருடனான உறவு, உங்களை தேவனுடன் நேரம் செலவிடுவதை தடுக்கும் என்றாலோ, அவரின் கவனத்தையும் அங்கீகாரத்தையும் தேவனுடையதற்கும் மேலாக நாடுவீர்கள் என்றாலும், உங்கள் முன்னுரிமைப் பட்டியலை மாற்றியமைக்க வேண்டும். அடிப்படை என்ன என்றால் நம் வாழ்வின் எந்த ஒரு சூழ்நிலையும் விருப்பமும் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவதையும் தேவனுக்காக வாழ்வதையும் தடுக்கும் என்றால் அது ஆரோக்கியமற்ற கவன சிதறல். அது நமக்கு தகுந்தது அல்ல.
தேவன் நாம் கவன சிதறல்களால் அல்ல அவருடைய ஆவியால் அசைக்கப் பட வேண்டும் என்று விரும்புகிறார். ஆகவே இன்றே வாழ்வின் எல்லா கவன சிதறல்களையும் புறம்ப்பாக்கிவிட்டு, நோக்கத்துடன் தேவன் மேல் கவனம் செலுத்துங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை முதலாவதாக தேடுவீர்கள் என்றால் அவரை கண்டடைவீர்கள். அவர் உங்களுக்காக எப்போதுமே காத்துக் கொண்டிருக்கிறார்.
ஜெபம்
தேவனே, என் வாழ்வில் இருக்கும் எல்லா கவனச் சிதறல்களை அவை வேதனை அளித்தாலும் அகற்றிவிட எனக்கு உதவுமாறு வேண்டுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக உம்மைத் தேடவும் என் அன்றாட வாழ்விலே உம் பரிசுத்த ஆவியால் நடத்தப்படவும் உதவியருளும். நான் உமக்காக வாழ விரும்புகிறேன்!