கவலைப்படாதே…தொழுது கொள்!

கவலைப்படாதே…தொழுது கொள்!

“கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.” – சங்கீதம் 34:9

ஒரு காலை வேளையிலே நான் ஜெபிக்க அமர்ந்தபோது ஜெபிப்பதற்கு பதிலாக என்னுடைய சமய பிரச்சினைகளையும், அதை எப்படி சமாளிக்கலாம் என்று கவலைப்படத் தொடங்கினேன்.

உடனே எனக்குள் இருந்த ஆவியானவரின் மெல்லிய குரல் என்னிடம், உன்னுடைய பிரச்சனைகளையா அல்லது எண்னையா, யாரை தொழுது கொள்ளப் போகிறாய் என்று கேட்டது. பார்த்தீர்களா, நான் என்னுடைய பிரச்சினைகளை மறந்துவிட்டு, அவரை தொழுது கொள்வதில் நேரம் செலவிட விரும்பும் போது, தேவன் என் பிரச்சினைகளை கையாள அதிக விருப்பம் உள்ளவராக இருக்கிறார்.

நாம் தேவனை தொழுது கொள்ளும் போது, நம்மை கீழே அழுத்தும் உணர்ச்சிகளையும் மன பாரங்களையும் அவிழ்த்து விடுகிறோம். தேவனுடைய மகத்துவத்திலே அது விழுங்கப்பட்டு விடுகிறது. நாம் நம் கண்களை அவர் மீது வைத்து, தொழுது கொள்ளும் போது, நம் வாழ்க்கைக்கான அவருடைய திட்டம், எல்லா காரியங்களும் நம் நன்மைக்கு ஏதுவாக கூடி வருவதை காண்போம்.

உண்மையான தெய்வ பயத்தோடு அவரை தொழுது கொள்கிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது என்று வேதம் சொல்கிறது. உங்கள் எல்லா தேவைகளும் சந்தேகப்படும் என்பதில் உறுதியாக இருக்க விரும்புகிறீர்களா? பின்னர் கவலைப்படாமல் தொழுது கொள்ளுங்கள்.

நீங்கள் எத்தகைய கஷ்டங்களை சந்தித்தாலும் சரி, தேவனை துதித்துக் கொண்டும் அவருக்கு மகிமை செலுத்திக் கொண்டும் இருங்கள். விசுவாசம் உங்கள் இருதயத்துக்குள் எழும்பும். நீங்கள் மேற்கொள்வீர்கள்.


ஜெபம்

தேவனே, நான் கவலைப்பட மாட்டேன். மாறாக நான் உம்மை தொழுது கொள்ள தெரிந்து கொள்கிறேன். நீர் பெரியவர், வல்லமை உள்ளவர். நீர் என் மேல் கொண்டிருக்கும் அன்பினாலும் உமது நன்மை செய்யும் தன்மையாலும் என் தேவைகள் எல்லாம் சந்திக்கப்படுகிறது என்று அறிந்திருக்கிறேன்.

 

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon