
“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.” – பிலி 4:6
நீங்கள் அழுத்தத்தில் இருக்கும்போது, அதைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக அதற்காய் ஜெபிப்பதே எப்போதும் சிறந்தது. ஒரு வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஜெபமே செயல் திட்டமாகும். இயேசு இவ்வுலகில் இருந்த போது ஜெபம் செய்தார். இயேசு தமது வாழ்க்கையையும், புகழ் முதற் கொண்டு எல்லாவற்றையும் ஜெபத்தின் மூலம் தேவனிடம் ஒப்படைத்தார். நாமும் அவ்வாறே செய்ய முடியும். நம்முடைய பிரச்சினைகள் அனைத்தையும் அவரிடம் விளக்கி சொல்ல வேண்டிய அவசியமில்லை; நாம் அவற்றை அவரிடம் கொடுத்து விடலாம். எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும்படி அவரிடம் கேட்கலாம்.
ஜெபத்தை சிக்கலாக்காமல் கவனமாக இருங்கள். அனேக சமயங்களில் கடவுளுடன் தனியாக நேரம் செலவழிக்க அல்லது ஆலயத்திற்கு செல்லும் வரை மக்கள் ஜெபிக்க காத்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எந்த நேரத்திலும் ஜெபிக்க முடியும் என்பதை உணராமலிருக்கின்றனர். ஒரு எளிமையான விசுவாசமுள்ள ஜெபித்திலே நம்பிக்கையாயிருங்கள். பிலிப்பியர் 4:6-ல் பவுலின் அறிவுறுத்தல்களை நினைவில் வையுங்கள். கவலைப்படுவதற்குப் பதிலாக ஜெபம் செய்யுங்கள். நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது தேவன் உங்களுக்கு உதவி செய்யும் படி கேளுங்கள்.
தேவன் உண்மையுள்ளவர் என்று வேதம் சொல்கிறது – அது அவருடைய குணாதிசயங்களில் ஒன்றாகும். நாம் அவரிடம் உதவிக்காக ஜெபிக்கும் போது அவர் நமக்காக வருவார் என்று நம்பலாம். எனவே நாம் அவரை முழுவதுமாக நம்ப வேண்டும். அப்படி நாம் செய்யும் போது, நம் வழியில் வரக்கூடிய எதற்கும் நாம் தயாராக இருப்போம்.
ஜெபம்
தேவனே, நான் கவலைப்பட்டுக் கொண்டே என் வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. அதற்கு பதிலாக, எல்லா நேரங்களிலும் உம்மிடம் ஜெபம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள நான் இன்று முடிவு செய்கிறேன்.