“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” – ஏசா 40:31
மக்கள் அனேகந்தரம் என்னிடம், ‘நான் தேவனிடமிருந்து தான் கேட்கிறேனா அல்லது நானாக நினைத்துக் கொள்கிறேனா என்பதை எப்படி உறுதியாக அறிந்து கொள்வது’ என்று கேட்டதுண்டு.
இதற்கான பதில் காத்திருக்க கற்றுக் கொள்வதே என்று நம்புகிறேன். பெரிய தீர்மாணங்களை கொண்டிருப்பவர்களாக, நாம் அனேகந்தரம் துரிதமாக செயல் பட வேண்டுமென்று உணர்கிறோம். நாம் ஏதோவொன்றை செய்ய வேண்டும், இப்போதே செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டுமென்பதை பற்றி ஒரு தெளிவான பிம்பம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று தேவனுடைய ஞானம் கூறுகிறது.
நாமனைவரும் பின்னிட்டு, ஒவ்வொரு சூழ்னிலையையும், தேவனுடைய பார்வையிலிருந்து பார்க்கும் தண்மையை வளர்த்திக் கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே நாம் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அதன்படி தீர்மாணங்களை எடுக்க முடியும்.
காத்திருப்பது தான் பெலன். நீங்கள் கர்த்தருக்கு காத்திருக்கும் போது, தேவன் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை உங்கள் ஆவியிலே உணர்வீர்கள்…நீங்கள் நினைப்பதல்ல, அவர் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறாரோ அதை உணர்வீர்கள்.
கடினமான தீர்மாணங்களை எடுக்கும் போது, பிறகு நீங்கள் வருத்தப்படும் படியாக, அடியை எடுப்பதற்கு முன், ஒரு தெளிவான பதில் கிடைக்கும் வரை காத்திருப்பதே ஞானமாகும். அது ஒருவேளை சவுகரியமானதாக இல்லாமலிருக்கலாம், நீங்கள் அவசரப்படலாம். ஆனால் தேவனுடைய ஞானம், அறிவுக்கு முன் அந்த அழுத்தமானது மேலோங்க அனுமதிக்காதீர்.
ஜெபம்
தேவனே, அவசரத்தில் வருத்தப்படும் படியான ஒரு தீர்மாணத்தை நான் எடுத்து விட விரும்பவில்லை. அனுதினமும் உம்மிடம் காத்திருக்க எனக்கு அறிவுறுத்தும். அது ஒருவேளை கடினமாக இருக்கலாம். ஆனால் உம்முடைய ஞானத்தையும், அறிவையும் பெற்றுக் கொள்வது தகுதியானதாகும்.