நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.” – புல 3:22-23
ஒவ்வொரு நாளும், கடந்த காலத்தின் கதவை அடைத்து விட்டு, ஒரு புதிய தொடக்கத்தை அனுபவிக்க ஒரு புதிய வாய்ப்பாக இருக்கிறது. கடவுள் நாட்களை இருபத்தி நான்கு மணி நேர பகுதிகளாகப் பிரித்தது, நாம் புதிதாக தொடங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஒரு புதிய நாள், ஓர் புதிய மாதம் மற்றும் ஒரு புதிய ஆண்டு எப்போதும் இருக்கிறது. ஆனால் இந்த புதிய தொடக்கங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்க வேண்டும்.
நீங்கள் குற்ற உணர்வோடும், ஆக்கினைத் தீர்ப்போடும் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் செய்த ஏதோவொன்றைப் பற்றி நீங்கள் மோசமாக நினைக்கிறீர்களா? அல்லது நேற்று நடந்ததை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா> எவ்வளவு நேரம் கடந்துவிட்டாலும், கடந்த காலம் இன்னும் கடந்த காலமே. என்ன நடந்ததோ அது நடந்தது தான். இப்போது கடவுளால் மட்டுமே அதை பார்த்துக் கொள்ள முடியும். உங்கள் பங்கு என்னவென்றால், உங்கள் தவறை ஒப்புக்கொள்வதும், மனந்திரும்புவதும், கடவுளின் மன்னிப்பைப் பெறுவதும், தொடர்ந்து செல்வதுமேயாகும்.
புலம்பலில், எரேமியா தீர்க்கதரிசி, தினமும் காலையில் தேவனுடைய இரக்கங்கள் புதிதாயிருக்கிறது என்று நம்மை ஊக்குவிக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் உங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தருகிறார். கடவுள் தினமும் இரக்கத்தின் ஒரு புதிய தொகுப்பை அளிப்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு நாளும், நாம் ஒரு புதிய தொடக்கத்தை பெற முடியும்!
ஜெபம்
தேவனே, உம்முடைய இரக்கம் தினமும் காலையில் புதியதாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! உமது அன்பு, தயவு, இரக்கம் மற்றும் உண்மையுள்ள தன்மை ஆகியவற்றால் நான் ஒவ்வொரு நாளையும் புதியதாக தொடங்க முடியும்!