மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். (எபிரேயர் 10:28-29)
பரிசுத்த ஆவியானவர் கிருபையின் ஆவியாயிருக்கிறார். கிருபை என்பது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை. அதைக் கொண்டு வேலை செய்வதன் மூலம் நம்மால் செய்ய முடியாததை எளிதாகச் செய்ய முடியும். ஆனால் முதலில், கடவுளுடைய வல்லமை, நாம் அவருடன் சரியாக இருக்க உதவுகிறது. அதனால் அவர் நம்மில் வாழ முடியும். நாம் அவருடைய வீடாக மாற முடியும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருப்பதால், நம்முடைய சொந்த பெலத்தில் முயற்சி செய்வதன் மூலம் நம்மால் செய்ய முடியாததைச், செய்ய, நம்முடைய இருதயத்தின் ஆழத்தை அடைந்து கிருபையின் ஆவியின் வல்லமையைப் பெறலாம்.
உதாரணமாக, எனது குணாதிசயத்தில் பல குறைபாடுகளைக் கண்டதால், பல ஆண்டுகளாக என்னை மாற்றிக் கொள்ள முயற்சித்தேன். எனது முயற்சியும், கடின உழைப்பும் மாற்றத்தை உருவாக்காததால் பெரும்பாலான நேரங்களில் நான் விரக்தியடைந்தேன். நான் சொல்லக் கூடாத விஷயங்களை, இரக்கமற்ற விஷயங்களைச் சொல்கிறேன் என்று உணர்ந்தால், நிறுத்தத் தீர்மானிப்பேன். ஆனால் நான் என்ன செய்தாலும், என்னால் என்னை மாற்ற முடியவில்லை. சில சமயங்களில் நான் மிகவும் மோசமாகி விட்டேன் என்பது போல் தோன்றியது.
இறுதியாக, நான் கடவுளிடம் கூக்குரலிட்டேன். இனி என்னால் என்னை மாற்ற முயற்சிக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டேன். அந்த நேரத்தில், கடவுள் என் இருதயத்துடன் பேசுவதை நான் கேட்டேன். நல்லது. இப்போது நான் உன் வாழ்க்கையில் ஏதாவது செய்ய முடியும் என்று. கடவுள் நம் வாழ்வில் மாற்றங்களைச் செய்யும் போது, அவர் மகிமை பெறுகிறார்; எனவே, அவர் நம்மை நாமே மாற்றிக் கொள்ள விடமாட்டார். நாம் கடவுளின் மீது சாய்ந்து கொள்ளாமல் மாற முயலும்போது, அவரை “சுழலுக்கு வெளியே” விட்டு விடுகிறோம். நம்மை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதற்குப் பதிலாக, நம்மை மாற்றும் படி அவரிடம் கேட்க வேண்டும். பின்னர் அவருடைய கிருபையின் ஆவி நம்மில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளிடம் உதவி கேட்காமல் எதையும் செய்ய முயற்சிக்காதீர்கள்.