“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;” – எபேசியர் 2:8
நம்மில் அநேகர் கிருபையால் தான் இரட்சிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை அறிந்து இருக்கிறோம். ஆனால் எத்தனை பேர் தேவனுடைய கிருபையின் வல்லமையை உண்மையாலுமே அறிந்திருக்கின்றனர் என்பதை அறியேன். தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அனைத்தும் கிருபையால், விசுவாத்தின் மூலம் வரவேண்டும். எனவே கிருபையை விளங்கிக் கொள்ளும் போது நீங்கள் விசுவாசத்தில் நடந்து தேவனுடைய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளலாம்.
தேவனுடைய கிருபையானது சிக்கலானதோ, குழப்பமடைய கூடியதோ இல்லை. அது எளிமையானது. ஆகவேதான் அநேகர் அதை தவற விட்டு விடுகின்றனர். கிருபையை விட அதிக வல்லமையானது வேறெதுவும் இல்லை. வேதத்தில் உள்ள அனைத்து இரட்சிப்பு, பரிசுத்த ஆவியின் நிறைவு, அவருடனான ஐக்கியம், நம் அனுதின வாழ்வில் வெற்றி போன்ற அனைத்தும் இதனை சார்ந்ததே. கிருபை இல்லாமல் நாம் ஒன்றும் இல்லை, நம்மிடம் எதுவும் இல்லை, நம்மால் எதுவுமே செய்ய இயலாது.
கிருபையை பற்றி கேட்பதோடு, நம் வாழ்விலுள்ள அனைத்தும் நம் தகுதிகளையும், திறமைகளையும் சார்ந்திராமல், நம் தேவைகளை சந்திக்க தேவன் தம்முடைய அளவிட இயலாத வல்லமையை உபயோகிக்க விருப்பம் உள்ளவராக இருந்ததாலே ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதுதான் கிருபை.
அந்த உண்மையை கவனமாக நோக்கி உங்கள் விசுவாசம் வளர்வதை கவனியுங்கள்.
ஜெபம்
தேவனே, கிருபையின் உண்மையான வல்லமையை அறிந்து கொள்ளாத படி, கிருபையைப் பற்றி மட்டும் கேட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. உம்முடைய கிருபை எவ்வளவு அற்புதமானது என்பதை உம் மீது இருக்கும் என் விசுவாசம் வளரத்தக்கதாக உம்முடைய கிருபை எவ்வளவு அற்புதமானது என்பதை நான் விளங்கிக் கொள்ள எனக்கு உதவுவீராக.