“குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்.” – மத் 23:24
இன்று எத்தனை சபை பிரிவுகள் மற்றும் தன்னிச்சையாக நடைபெறும் தேவாலயங்கள் உள்ளன என்று நம்புவதற்கு கடினமாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு வேதமும், செய்தியும் மட்டுமே உள்ளது.
ஆனால் பல ஆண்டுகளாக, பெருமை மற்றும் குறுகிய மனப்பான்மை காரணமாக, பலவிதமான சபைகளையும், சபை குழுக்களையும், (வேதாகமம் சொல்கிறதாக அவர்கள் நம்பும் பல கருத்துக்களை ஆதரிக்கும் விதமாக) ஏன் பல்வேறுவிதமான வேதாகம மொழியாக்கங்களையும் கொண்டிருக்க வேண்டுமென்ற தேவையை உணர்ந்தனர்.
நம்மில் யாரும் 100 சதவீதம் சரியானவர்கள் அல்ல என்பதை நான் உணர்ந்தேன். நாம் போராடும் பெரும்பாலான விஷயங்கள் சின்ன சின்ன காரியங்களே. மத்தேயு 23:24 ல், பரிசேயர்களிடம் இயேசு சொன்னார், குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். அவர்கள் சிறிய விஷயங்களில் ஆர்வம் காட்டியது, உண்மையிலேயே முக்கியமான விஷயங்களைக் கையாள்வதைத் தடுத்து விட்டது.
நாம் வெறுப்பையும், பிரிவினைகளையும் நம் வாழ்விலே கொண்டிருப்போமேயானால், அவற்றைத் தடுக்க நாம் பெலனற்றவர்களாக இருப்போம். கிறிஸ்துவின் அன்பில் இருக்கும் ஒற்றுமையும், ஏற்றுக் கொள்ளுதலுமே, தப்பெண்ணத்தை தோற்கடிக்கும் வல்லமையைக் கொண்டு வரும். கடவுளின் அன்பு எப்போதும் பிறரை குறை கூறும் பிரிவினையை ஏற்படுத்தும் மனப்பான்மையை விடபெரியது.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, என் இருதயத்தில் உள்ள பாவத்தையும், பிவினையையும், வெறுப்பையும் உண்டாக்கும் எந்தவொரு காரியத்தையும் எனக்கு வெளிப்படுத்துவீராக. நான் உம்முடைய அன்பில் நடந்து, கிறிஸ்துவுக்குள்ளாக என் சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறேன்.