
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். (பிலிப்பியன்ஸ் 4:6)
கடவுளுடனான எனது பயணத்தில், நான் விரும்பியதையும், எனக்கு தேவையானதையும் முடிந்தவரை சில வார்த்தைகளில் அவரிடம் கேட்க முயற்சி செய்யும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்ட சமயத்தை நான் நினைவில் கொள்கிறேன். நான் பிரார்த்தனை செய்யும் போது அதிகமாக பேசும் கெட்ட பழக்கம் எனக்கு இருந்தது. குறுகிய ஜெபங்கள் நல்ல பிரார்த்தனைகள் அல்ல என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்ததால் நான் அப்படி தொடர்ந்து செய்தேன். நிச்சயமாக, நீண்ட பிரார்த்தனைகள் நல்ல பிரார்த்தனைகள், அவை உண்மையாகவும், அவசியமாகவும் இருந்தால்.
சில வார்த்தைகளில் என் வேண்டுகோளை வைக்க வேண்டுமென தேவன் என்னிடம் கேட்ட்தன் அர்த்தம், சுருக்கமாக எனது வேண்டுகோளை வைத்து சிறிது நேரம் காத்திருந்து பின்னர் மற்ற காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டுமென்பதே. நான் அப்படி செய்தபோது, என் ஜெப வாழ்க்கையில் அதிகரித்த வல்லமையை என்னால் நம்ப முடியவில்லை. இன்றுவரை, நான் அவ்வாறு ஜெபிக்கும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமையையும், பிரசன்னத்தையும் அதிகமாக உணர்கிறேன். என்னுடைய பிரார்த்தனைகளில் மிகவும் வல்லமை வாய்ந்த சில, “நன்றி, ஆண்டவரே,” “தேவனே, எனக்கு உம்முடைய ஞானம் தேவை,” “நான் தொடர்ந்து செல்ல எனக்கு வலிமை கொடும், ஆண்டவரே,” “இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்”. எல்லாவற்றிலும் மிகவும் வல்லமை வாய்ந்த ஜெபம்: “உதவி செய்யும்!!!!!!!” பாருங்கள்? நம் சார்பாக செயல்பட தேவனை அழைக்கும்போது ஒரு சில வார்த்தைகள் போதும் அவை நம்மை பரலோகத்துடன் இணைக்கும். நமது பிரார்த்தனைகளின் நீளம் பலனளிக்க செய்வதில்லை ஆனால் உண்மையும், விசுவாசமும் தான்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: ஜெபத்தில் கூட, அளவை விட தரம் எப்போதும் சிறந்தது.