“என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” – பிலி 4:19
மக்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சங்களில் ஒன்று பற்றாக்குறை பற்றிய பயம். உங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்பட மாட்டாது என்ற பயம் – நீங்கள் வளங்களை இழந்துவிடுவீர்கள், சரியான நேரத்தில் கடவுள் உங்களுக்காக வரமாட்டார் என்ற பயம்.
ஒருவேளை நீங்கள் இதற்கு முன்பு இல்லாத அளவு பற்றாக்குறையான சூழ்நிலையில் இருக்கலாம். பயங்கரமான பொருளாதார நெருக்கடி, உங்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஒரு உணர்வுப்பூர்வமான அல்லது ஆவிக்குறிய பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம். பயத்தின் ஆவி உங்களைத் தாக்கிக் கொண்டிருக்கலாம். தேவன் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாட்டாரென்றும் உங்களால் வெற்றி கொள்ள முடியாது என்றும் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
சத்துரு ஒரு பொய்யன் என்பதை நீங்கள் இன்று அறிந்து கொள்ள வேண்டும். உங்கள் நிலைமையை கடவுள் கவனித்துக்கொள்கிறார். அவருக்கு ஒரு திட்டம் உள்ளது. அவர் உங்களுக்கு தேவையானதை சரியான நேரத்தில் அளிக்க உங்களுக்காய் கிரியை செய்து கொண்டிருக்கிறார். ஒருவேளை உங்களுக்கு எதுவும் நடைபெறாதது போல் தோன்றினாலும், எப்படி அற்புதமாக கொடுப்பது என்பதை தேவன் அறிந்திருக்கிறார்.
உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் – பொருளாதாரம், சரீரம், உணர்ச்சி, ஆவி – நீங்கள் பற்றாக்குறையைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. கடவுள் உங்களுக்கு கொடுப்பார், உங்களை ஆறுதல்படுத்துவார், உங்களை போஷிப்பார், உங்களை மீண்டும் பலமுள்ள இடத்திற்கு கொண்டு வருவார். அவருடைய ஏற்பாட்டில் நம்பிக்கை வைக்கவும்.
ஜெபம்
தேவனே, என் தேவைகளை நீர் பூர்த்தி செய்வீர் என்று உம்முடைய வார்த்தை கூறுகிறது, எனவே பற்றாக்குறை குறித்த பயத்திற்கு நான் உட்பட மாட்டேன். நீர் என்னை நேசிக்கிறீர் என்றும், எனக்கானவைகளை பார்த்துக் கொள்வீர் என்றும் நான் நம்புகிறேன்.