அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். (லூக்கா 5:5)
தேவன் நமக்காக ஆசீர்வாதங்களையும், புதிய வாய்ப்புகளையும் வைத்திருக்கிறார். அவற்றைப் பெறுவதற்கு நாம் அவருடைய சத்தத்தைக் கேட்க வேண்டும், அப்பொழுது நாம் அதை நோக்கி விசுவாசத்தில் அடுத்த அடி எடுத்து வைக்க முடியும். இது, பெரும்பாலும் நாம் செய்ய விரும்பாத காரியங்களைச் செய்வதைக் குறிக்கிறது, இது வேலை செய்யும் என்று உணராமல் இருக்கலாம் அல்லது அதை முக்கியமானதாக கருதாமல் இருக்கலாம். ஆனால் தேவன் மீதான நமது நம்பிக்கையும், பயபக்தியும், நாம் விரும்பும், நினைக்கும் அல்லது உணரும் காரியங்களை விட அதிகமாக இருக்க வேண்டும்.
லூக்கா 5ல் இதற்கான சரியான உதாரணத்தை நாம் பார்க்கிறோம். பேதுருவும் மற்ற சீடர்களும் இரவு முழுவதும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்; அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் சோர்வாக உணர்ந்தனர்; உண்மையில், அவர்கள் களைத்துப் போயிருந்தனர். அவர்களுக்கு ஒரு நல்ல தூக்கம் மற்றும் நல்ல உணவு தேவைப்பட்டது. வலைகளை துவைத்து, மடித்து வைத்திருந்தார்கள். அது அவர்களுக்கு பெரிய வேலையாக இருந்தது.
அப்பொழுது இயேசு ஏரிக்கரையில் தோன்றி, மீன் பிடிக்க வேண்டுமானால், இந்த முறை ஆழமான நீரில் மீண்டும் வலையை வீச வேண்டும் என்று அவர்களிடம் கூறினார். அவர்கள் இரவு முழுவதும் கடினமாக உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை என்றும், இப்போது அவர்கள் சோர்வாக இருப்பதாகவும் பேதுரு விளக்கினார். ஆனால் அவர் மீண்டும் முயற்சி செய்ய ஒப்புக்கொண்டார், ஏனென்றால் இயேசு அவ்வாறு செய்யச் சொன்னார்.
இப்படிப்பட்ட மனப்பான்மையே கர்த்தர் நம்மிடம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாம் ஏதாவது ஒன்றை விரும்பாமல் இருக்கலாம்; இது ஒரு நல்ல யோசனை என்று நாம் நினைக்காமல் இருக்கலாம்; அது வேலை செய்யாது என்று நாம் பயப்படலாம், ஆனால் தேவன் நம்மிடம் பேசும் போது, அதைக் கேட்கவும், அதற்கு கீழ்ப்படியவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: நீங்கள் ஒன்றை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கடவுளுக்குக் கீழ்ப்படிய தயாராக இருங்கள். அவர் உங்களுக்காக பெரிய காரியங்களை வைத்திருக்கிறார்!