
“அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” – 2 கொரி 9:7
கிறிஸ்தவர்களாகிய நாம் தாராளமானவர்களாக இருக்க வேண்டும். எதையெல்லாம் கொடுக்க கூடுமோ, எப்போதெல்லாம் கொடுக்க இயலுமோ, அப்போதெல்லாம் தாராளமாக இருக்க வேண்டும். அப்படியென்றால் பணத்தை மட்டும் இது குறிக்கிறதில்லை. நம் உதவியை, ஊக்கத்தை, நேரத்தை, தாலந்துகளை, மன்னிப்பையும் கொடுக்கலாம்.
அப்படியென்றால் சுயனலமானது நம் வாழ்விலே வர அனுமதிக்கலாகாது. அனேகர் கருமிகளாக அவர்கள் கொண்டிருப்பதை பற்றிப் பிடித்துக் கொண்டும், அதைக் கொடுத்து விட பயந்து கொண்டும் இருக்கின்றனர். மற்றவர்களோ தங்கள் நடவடிக்கைகளிலே கருமிகளாக இருக்கிறதில்லை, ஆனால் தங்கள் இருதயங்களிலே கருமிகளாக இருக்கின்றனர். அவர்கள் விரும்பி கொடுக்கிறதில்லை, கொடுக்க வேண்டுமே என்பதற்காக கொடுக்கின்றனர்.
ஆனால் கொடுக்கும் படி தேவன் நமக்கு சொன்ன வழி இதுவல்ல. 2 கொரி 9:7லே உற்சாகமாக (சந்தோசமாக) கொடுப்பவனிடத்தில் (மனப்பூர்வமாக) தேவன் பிரியமாயிருக்கிறார், களிகூறுகிறார், கைவிட்டு விட மனமற்றவராக இருக்கிறார்.
இதை நீங்கள் எண்ணிப்பார்ப்பீர்களேயென்றால், நம் வாழ்க்கையை நாம் தேவனிடத்தில் கொடுக்கும் போது நாம் பெற்றிருக்கும் அனைத்தும் அவருடையது தானே. அது நமக்கு இனியும் சொந்தமல்ல. நாம் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். தேவன் நமக்கு கொடுத்திருப்பதை அவர் விரும்பும் வண்ணம் கொடுக்க வேண்டும்.
இன்றே உற்சாகமாக கொடுங்கள். அது தேவனுக்கு பிரியம். உற்சாகமாக கொடுப்பவர்கள் சந்தோசமானவர்கள், நிறைவானவர்கள், அதிக பலனுள்ளவர்கள்.
ஜெபம்
தேவனே, இப்போதே நான் ஒரு உற்சாகமாக கொடுக்கிறவனாக என்ன்னை மாற்றிக் கொள்கிறேன். உமக்கும், என் வாழ்வில் உள்ளவர்களுக்கும் எப்படி தாராளமாக கொடுப்பது என்பதை எனக்கு காட்டியருளும்.