“ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.” – 2 சாமு 24:24
தேவனுடைய பொருளாதாரத்திலே மலிவான எதுவும் பெற்றுக் கொள்ள தகுந்ததாய் இருப்பதில்லை. தேவன் நம்மை விடுவிக்க தம்முடைய ஒரேபேறான குமாரனை கொடுத்தார். நாம் அந்த தியாகத்திற்கு ஈடு கொடுக்க இயலாததாகையால் நமக்கு விலையேறப்பெற்ற ஏதோவொன்றை அவருக்கு நாம் தியாகமாக கொடுக்க வேண்டும். தாவீது ராஜா, தான் தேவனுக்கு விலைக்கிரயம் செலுத்தப்படாத ஒன்றையும் கொடுக்க மாட்டார் என்று கூறுகிறார். நான் அதன் தாக்கத்தை உணர்ந்தாலொழிய அது உண்மையானதாக இருக்காது என்பதை அறிந்திருக்கிறேன்.
நான் உபயோகித்த ஆடைகளையோ, வீட்டு உபயோகப் பொருட்களையோ கொடுப்பது ஒரு நல்ல பண்பாக காணப்படலாம். ஆனால் அது உண்மையாக கொடுப்பதற்கு ஈடாகாது. உண்மையாக கொடுப்பதென்பது நான் ஒன்றை எனக்காக வைத்துக் கொள்ள விரும்புவதை மற்றவருக்கு கொடுப்பதாகும்.
உங்களுக்கு விருப்பமான ஏதோவொன்றை தேவன் கொடுத்து விடும் படி சொன்ன சோதனை காலங்கள் உங்களுக்கும் இருந்திருக்கும் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் நம்மேல் வைத்திருந்த அவருடைய அன்பினால் எப்படியாக அவர் தம்முடைய ஒரேபேறான குமாரனை கொடுத்தாரன்பதை பார்க்கும் போது உங்களை நீங்களே கொடுத்து விட வேண்டுமென்று தோன்றுகிறதல்லவா?
ஊண்மையென்னவென்றால் நாம் சந்தோசமாக இருப்பதற்காக கொடுக்க வேண்டும். நாம் விலைக்கிரயம் செலுத்த வேண்டியிராமல் இருந்தால் அது உண்மையாக கொடுப்பது இல்லையே.
ஜெபம்
தேவனே, நான் கொடுப்பது அர்த்தமுள்ளதாக இருக்க விரும்புகிறேன். நான் எப்போது எதைக் கொடுக்க வேண்டும், பிறருக்கு உதவவோ அல்லது ஒருவரை ஆசீர்வதிக்கவோ கொடுக்க வேண்டும் என்பதை எனக்கு காண்பித்தருளும். நீர் உம்முடைய அன்பை எனக்கு கொடுத்ததைப் போன்று நானும் பிறருக்கு கொடுக்க விரும்புகிறேன்.