“சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறது போலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.” – நீதி 17:14
கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக சத்துரு உபயோகிக்கும் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று சண்டையாகும். இந்த சண்டையின் ஆவிக்கு நேராக நம்மை நடத்தும் மூன்று காரியங்கள் இருக்கின்றன என்று நம்புகிறேன்.
- நம் வாய்: தவறான சமயத்தில் பேசப்பட்ட தவறான வார்த்தைகள் நிச்சயமாகவே எரிமலையை உண்டாக்கும். எவ்வளவு அதிகமாக தவறான வார்த்தைகளை நாம் அந்த தீயிலே போடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக அது எரியும். அந்த தீயை அனைக்கும் ஒரே வழி எரிபொருளை நீக்குவது தான்.
- நம் பெருமை: தவறான வார்த்தைகள் சண்டையை கிளைப்பி விடும் என்றாலும், ஒரு பெருமையான இருதயம் தான், சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளாமலிருக்கதக்கதாக அடங்க மறுக்கிறது. நாம் தான் கடைசி வார்த்தை கூற வேண்டுமென பெருமை விரும்புகிறது. ஆனால் அது அழிவுக்குள்ளாக நடத்திச் செல்லும் என்று வேதம் சொல்கிறது (நீதி 16:18)
- நம் கருத்துக்கள்: நம் கருத்துக்களை பிறர் மீது திணிக்க முயலுவதால், அனேக சமயங்களிலே சண்டைக்குள்ளாகிறோம். நமக்கு கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறதென்றும், தேவையில்லாத சமயங்களிலே, நாம் நம் கருத்துக்களை சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று உணர்ந்தால் நமக்கு வேண்டிய அறிவை நாம் பெற்றுக் கொள்வோம்.
நம் சண்டையினால் நம் வாழ்க்கையை ஊடுருவ எதிரி எப்போதுமே முயற்சிப்பான். சண்டையை மறுத்து, சமாதானத்தையும், ஐக்கியத்தையும், விளங்கிக் கொள்ளுதலையும் தொடர்வதின் மூலம் தேவனையும் பிறரையும் கனப்படுத்த தீர்மாணியுங்கள்.
ஜெபம்
பரிசுத்த ஆவியானவரே, சண்டை ஏற்படாதபடி காத்துக் கொள்ள எனக்கு உதவும். நான் என் வார்த்தைகளையும், கருத்துகளையும் உம்மிடம் கொடுக்கின்றேன். பிறருடனான என்னுடைய உறவிலே சண்டையின்றி வாழ விரும்புகிறேன்.