
“சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” – 1 கொரி 13:7
மக்களை நேசிப்பது என்றால் என்ன என்பதைப் பற்றிய ஒரு தெளிவான படத்தை 1 கொரி 13:7 கொடுக்கின்றது. உண்மையிலேயே இந்த வசனத்திற்கு கீழ்படிவதானது எனக்கு ஒரு சவாலாக இருந்தது என்று என்னால் சொல்ல முடியும். நான் வளரும் போது சந்தேகப்படவும், எவரையும் நம்பாமலிருக்கவும் போதிக்கப்பட்டேன். ஆனால் அன்பின் இயல்புகளை தியானித்து அன்பு சகலத்தையும் நம்பும் என்று உணர்ந்தது ஒரு புதிய மன நிலையை வளர்த்துக் கொள்ள உதவியது.
சந்தேகமானது, தேவனுக்கேற்ற உறவுகளுக்கு தேவையான தண்மைகளுக்கு எதிராக கிரியை செய்கிறது. நம்பிக்கையும், விசுவாசமும் நம் வாழ்க்கையிலே சந்தோசத்தைக் கொண்டு வந்து உறவுகள் எவ்வளவுக்கதிகமாக வளர இயலுமோ அவ்வளவாக வளர உதவுகின்றது. ஆனால் சந்தேகமானது ஒரு உறவை ஊனமாக்கி அதை அழித்து விடுகின்றது.
கவனியுங்கள். மக்கள் பரிபூரணமானவர்கள் அல்ல என்பது உண்மைதான். சில சமயங்களிலே நம் நம்பிக்கையை பிறர் அவர்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்ப்போமேயென்றால், மக்களிடம் எப்போதுமே சிறந்தவற்றைப் பார்ப்பது, எதிர்மறையான அனுபவங்களைப் பார்ப்பதை விட மேலானது.
சந்தேகத்தோடு போராடிக் கொண்டிருப்பீர்களென்றால், நம் எண்ணங்கள் தவறான திசை நோக்கி செல்லும் போது, நமக்கு நினைவுறுத்தும் அற்புதமான பரிசுத்த ஆவியானவர் இருக்கிறாரென்பதை இன்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஜெபம்
தேவனே, எப்போதும் பிறரை நம்பாமல் சந்தேகப்படுவது என் உறவுகளை சேதப்படுத்துகிறது என்று இப்போது விளங்கிக் கொண்டேன். பிறருக்கு என் இருதயத்தை எப்படி திறப்பதென்றும், எல்லா சூழ்னிலையிலும் சிறந்ததை எப்படி நம்புவது என்றும் எனக்கு காண்பித்தருளும்.