சமநிலையுடன் இருங்கள்

சமநிலையுடன் இருங்கள்

சமநிலையுடன் இருங்கள் (மிதமான, நிதானமான மனநிலை) தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். (1 பேதுரு 5:8)

பரிசுத்த ஆவியானவருக்கு செவிசாய்ப்பது, நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நம்மை சமநிலையில் வைத்திருக்கும். நாம் அதிகமாகப் பணம் செலவழிக்கும்போது அல்லது போதுமான அளவு செலவு செய்யாதபோது, அதிகமாகப் பேசும் போது அல்லது போதுமான அளவு பேசாமல் இருக்கும் போது, அல்லது நாம் அதிகமாக ஓய்வெடுக்கும்போது அல்லது போதுமான ஓய்வெடுக்காமல் இருக்கும்போதும் கூட ஆவியானவர் அதை நமக்குச் சொல்லுவார். எந்த நேரத்திலும் நாம் எதையாவது ஒன்றை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செய்கிறோம் என்றால், நாம் சமநிலையை மீறுகிறோம்.

இன்றைய வசனம், நாம் சமநிலையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது, எனவே சாத்தான் நம்மைச் சாதகமாக்கிக் கொள்ள முடியாது. பல ஆண்டுகளாக, வேலை செய்வதற்கான எனது அணுகுமுறையில் நான் சமநிலையில் இல்லாததால் அவன் என்னைப் பயன்படுத்திக் கொண்டான். எனது முழு வாழ்க்கையும் வேலையைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நான் வேலை செய்து எதையாவது சாதித்துக் கொண்டிருக்கும் வரை, பிசாசு எனக்கு எதிராகப் பயன்படுத்திய குற்ற உணர்ச்சியை நான் உணரவில்லை. ஆனால் எப்பொழுதும் உழைக்க வேண்டும் என்ற அந்த உந்துதல் கடவுளிடமிருந்து வரவில்லை; அது என் வாழ்க்கையில் தெய்வீக சமநிலையை நோக்கி என்னை தள்ளவில்லை. வேலை ஒரு நல்ல விஷயம், ஆனால் எனக்கு ஓய்வு மற்றும் மகிழ்ச்சி தேவை.

ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனிடமிருந்து கேட்க முற்படும்போது, உங்கள் வாழ்க்கையில் சமநிலையற்ற பகுதியை உங்களுக்குக் காண்பிக்கும்படி அவரிடம் கேளுங்கள் மற்றும் அவற்றை சரி செய்ய அவருடன் பணியாற்றுங்கள். வாழ்க்கையில் மாறி மாறி செய்வதற்கு நிறைய காரியங்கள் உள்ளன, எனவே சமநிலை தவறுவது எளிது. ஆனால் இந்த பகுதியில் நமக்கு உதவ கடவுள் எப்போதும் இருக்கிறார். நீங்கள் எதையாவது அதிகமாகச் செய்கிறீர்களா அல்லது மிகக் குறைவாகச் செய்கிறீர்களா என்று அவரிடம் கேட்டு, அவர் பரிந்துரைக்கும் மாற்றங்களைச் செய்யுங்கள்.


இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: கடவுளின் உதவியோடு சமநிலையில் இருங்கள்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon