“தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.” – சங்கீதம் 34:14
நம் சமாதானத்தை இழக்கும் படி செய்வது என்ன? தாமதமாக செல்வது, போக்குவரத்து நெரிசல், கீழே கொட்டப்பட்ட காபி போன்ற அனேக காரியங்கள் நம்மை சமாதானம் இழக்க செய்யலாம். அதனால் தான் அனுதினமும் சமாதானத்திலே நடப்பதைப் பயிற்சிப்பது மிகவும் முக்கியமானதாகும். உதாரணமாக உங்கள் வாயை எப்போது மூடிக் கொள்ள வேண்டும், சுலபமாக மனக்காயமடையக் கூடாது என்பதை நீங்கள் தான் தீர்மாணிக்க வேண்டும். சில சமயங்களிலே தவறாக இருந்தாலும் பரவாயில்லை என்றிருக்க வேண்டும்.
நீங்கள் வெறுமனே உட்கார்ந்து கொண்டு சமாதானத்தை விரும்பிக் கொண்டிருக்க முடியாது. பிசாசு உங்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விட வேண்டும் அல்லது நீங்கள் விரும்புவதை மக்கள் செய்ய வேண்டும் என்று விரும்பிக் கொண்டிருக்க முடியாது. சமாதானத்தை நாம் தீவிரமாக தொடர வேண்டுமென்று வேதம் சொல்கிறது. நீங்கள் சமாதனத்திற்காக ஏங்க உங்கள் மனதை செலுத்த வேண்டும்.
தேவனுடைய வார்த்தை நம் வாழ்விலே பலனளிக்க சமாதானத்தை தொடர்ந்து, அது நம் இருதயத்திலே விதைக்கப்பட வேண்டும். எல்லா விசுவாசிகளுக்கும் சமாதான ஆவியை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இதனால் தேவனுடைய வார்த்தை அவர்களிலும், அவர்கள் மூலமாகவும் பரவும்.
உங்கள் வாழ்விலே ஒரு விடிவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் அதற்காக எவ்வளவு முயன்றும் வருகிறதில்லையா? அது ஒருவேளை நீங்கள் சமாதானத்திலே வாழாதிருப்பதிலே இருக்கலாம். எனவே நான் உங்களை சமாதானத்திற்காக ஏங்குங்கள், அதை நாடுங்கள், உங்கள் எல்லா பெலத்தோடும் அதை தொடர்ந்து செல்லுங்கள் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன்.
ஜெபம்
தேவனே, நான் இனியும் சும்மா உட்கார்ந்து கொண்டு சமாதானம் தானாக வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். நான் மும்முரமாக அதை தொடர விரும்புகிறேன். உம்முடைய சமாதானத்தை பின்தொடர்ந்து செல்வது எப்படி என்பதை எனக்கு காட்டுவீராக.