தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். (கொலோசியர் 3:15)
சமாதானத்தைக் கண்டறிவதன் மூலம் என் வாழ்க்கையை நடத்த முயற்சித்தேன். நான் கடைக்கு செல்லும் போது, எனக்கு ஒரு பொருளை வாங்குவது குறித்து நிம்மதி இல்லை என்றால், நான் அதை வாங்க மாட்டேன். நான் ஒரு உரையாடலில் ஈடுபட்டு, என் சமாதானத்தை இழந்துவிட்டால், அமைதியாகி விடுவேன். நான் முடிவுகளை எடுக்கும்போது, எனக்கு முன்னால் உள்ள விருப்பங்களைப் பார்த்து, சமாதானம் எதில் இருக்கிறது என்று பார்ப்பேன். கடவுளின் சத்தத்திற்கும், என் கவனத்தைப் பெற போட்டியிடும் மற்ற சத்தத்திற்கும் இடையில் நான் பகுத்தறிய முயற்சிக்கும்போது, எந்த சத்தம் அல்லது செய்தி என் இருதயத்தில் கடவுளின் சமாதானத்தைக் கொண்டுவருகிறது என்பதைப் பார்ப்பேன்.
நம் வாழ்வில் அதிகாரத்தைத் தக்கவைக்க, சமாதானத்தைப் பேணுவது முக்கியம் என்பதை நான் கற்றுக்கொண்டேன். நம்மிடம் சமாதானம் இல்லாதபோது, நாம் ஒரு பெரிய தவறு செய்து இருக்கலாம். சமாதானமின்றி நான் ஒருபோதும் செயல்படக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு நான் செல்வேன். சமாதானம் என்பது நாம் எடுத்த தீர்மானத்தை தேவன் அங்கீகரிக்கும் ஒரு “உள் உறுதிப்பாடு” என்று கூறலாம்.
தேவன் நம்மை சமாதானத்தால் வழிநடத்துகிறார். இன்றைய வசனம் சமாதானம் என்பது “அவுட் இல்லை” அல்லது “அவுட்” என்பதைத் தீர்மானிக்கும் நடுவரைப் போன்றது என்று கூறுகிறது. சமாதானம் இல்லை என்றால், அது “அவுட்”! நம் மனதில் எழும் அனைத்து கேள்விகளையும், நம் வாழ்வில் நாம் எடுக்க வேண்டிய முடிவுகளையும், தீர்மானித்து முடிவெடுத்து, நம் மனதிலும், உள்ளத்திலும் உள்ள நல்லிணக்கத்தை தேவன் ஆளவும், நம் இருதயங்களில் தொடர்ந்து நடுவராக செயல்படவும் அவரை அனுமதிக்க வேண்டும்.
சரி மற்றும் தவறு பற்றிய நமது சொந்த உணர்வுகளுக்குக் கீழ்ப்படிய நாம் கற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் நம் உள் மனசாட்சிக்கு, சங்கடமான செயல்களைச் செய்வதை தவிர்க்க வேண்டும். நாம் சரியான பாதையில் செல்கிறோமா, இல்லையா என்பதைத் தெரிவிக்க கடவுள் நம் மனசாட்சியில் சமாதானத்தை, அமைதியைக் கொடுக்கிறார் அல்லது எடுக்கிறார்.
இன்று உங்களுக்கான கடவுளின் வார்த்தை: இன்று உங்கள் நடுவராக சமாதானம் நிலவட்டும். உங்களுக்கு சமாதானம் இருக்கும் போது உங்கள் முடிவு “அவுட் இல்லை” மற்றும் இல்லாதபோது “அவுட்” என்பதை அறிந்து நீங்கள் கொள்ளுங்கள்.