
“தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.” – கொலோ 3:15
நம் அனைவருக்கும் உணர்ச்சிகள் உள்ளது. அவை நம்மிலே தங்கி உள்ளது. ஒவ்வொரு விசுவாசியின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று உணர்ச்சியில் ஸ்திரத்தன்மையாக இருக்க வேண்டும் என்பதே என்று நான் நம்புகிறேன். நம் உணர்ச்சிகள் நம்மை நிர்வகிக்க அனுமதிப்பதற்கு பதிலாக நம் உணர்ச்சிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பதை அறிய நாம் தேவனை தேட வேண்டும்.
இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குகிறீர்கள். பிறகு கடனில் இருந்து வெளியேற நீங்கள் தேவனிடம் ஒரு உறுதிப்பாட்டைச் செய்துள்ளீர்கள். உங்கள் செலவினங்களைக் கவனிக்க முடிவு செய்துள்ளீர்கள், உங்களுக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்காமல் இருக்க தீர்மாணிக்கிறீர்கள். ஆனால் ஷாப்பிங் செய்யும் போது, கடைகளில் ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ள பொருட்களில் 50 சதவிகிதம் பெரிய தள்ளுபடி விற்பனையை காண்கிறீர்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் உங்கள் உணர்ச்சிகளைப் பின்பற்றுவீர்களா, அல்லது முடிவெடுப்பதற்கு முன் உங்கள் உணர்ச்சிகள் அடங்கும் வரை காத்திருப்பீர்களா?
நீங்கள், சமாதானத்தால் கட்டப்படும் முடிவுகளை எடுக்க தேவன் விரும்புகிறார். அவருடைய சமாதானம் உங்களை ஆள அனுமதிப்பதென்பது உங்கள் உணர்ச்சிகள் அடங்கும் வரை சிறிது நேரம் காத்திருத்தல், பின்னர் இது சரியான செயல் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா என்று சோதிப்பது.
உங்கள் உணர்ச்சிகள் உங்கள் முடிவுகளை எடுக்க விடாதீர்கள். எப்போதும் சமாதானத்தைப் பின்பற்றுங்கள்.
ஜெபம்
ஆண்டவரே, உம்முடைய சமாதானம் என் இருதயத்தை ஆள நான் தேர்வு செய்கிறேன். எனது உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க நான் விரும்பவில்லை, ஆனால் நான் எடுக்க விரும்பும் பாதைகளை அமைதியாகவும் சமாதானத்துடனும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.