
“அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.” – உபாகமம் 10:18
ஒருவர் தேவையில் இருப்பதை பார்த்தும், கேட்டும் அதற்காக ஒன்றுமே செய்யாமலிருப்பது தவறாகும். இதை நான் உங்களுக்கு விளக்கட்டும்.
கொஞ்சம் நேரத்திற்கு முன், நான் ஒடுக்கப்பட்டவர்களின் நியாயத்திற்காக எவ்வளவு உழைக்க வேண்டும் என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினார். கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும் அனைவரின் அழைப்பின் ஒரு பகுதி இது.
அவர் திக்கற்றவர்களுக்கு, விதவைகளுக்கும், கொடுக்கப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும், தனித்து விடப்பட்ட மறக்கப்பட்டவர்களுக்கும் உதவும் மக்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டிலே கட்டளைகளை கொடுத்த சமயத்திலிருந்து எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
அவர் மோசே மூலமாக பேசிய போது, நீங்கள் எந்தவொரு விதவையையோ, தகப்பனற்ற பிள்ளையையோ ஒடுக்கக்கூடாது என்றார் (யாத் 22:22). தேவன் பாரபட்சம் உள்ளவர் அல்ல. அவர் விதவைகளுக்கும், தகப்பனற்றவர்கள் அனைவருக்கும் நீதியை நிலை நிறுத்துவதோடு, அந்நியர்களையும், தற்காலிகமாக தங்கி இருப்பவர்களையும் நேசிப்பதோடு, அவர்களுக்கு ஆதாரத்தையும் உடையையும் அளிக்கிறார் (உபா 14:29). தேவன் மக்களிடம், அவர்கள் அந்நியர்களுக்கும், விதவைகளுக்கும், தகப்பன் அற்றவர்களுக்கும், உணவு அளித்தால் அவர்களின் கையில் பிரயாசத்தை அவர் ஆசீர்வதிப்பதாக கூறினார் (உப 14:29).
இன்று அதிக தனிமையில், மறக்கப்பட்டு வாழும் சிலர் பிழைப்பதற்காக விபச்சாரத்துக்குள்ளாக வற்புறுத்தப்பட்டிருக்கும், பெண் பிள்ளைகள் எய்ட்ஸ் வியாதியால், பெற்றோர்கள் மரித்ததால் அனாதையாக்கப்பட்டிருக்கும் சிறுவர்கள், சிறைச்சாலை அறையிலே ஒவ்வொரு நாளும் தனிமையாக காலம் செலவிடும் கைதிகள், தெருவோரத்தில் வாழும் வீடு வாசல் அற்றவர்கள் இதுபோன்ற இன்னும் அநேகர் தேவையில் இருக்கின்றனர்.
இவை அனைத்தும் நமக்கு மேற்கொள்ள கூடியவையாக தோன்றாமல் இருக்கலாம். இதைப்பற்றி என்னால் என்ன செய்ய இயலும் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். எல்லாவற்றையும் என்னால் தீர்க்க இயலாமல் இருக்கலாம். ஆனால் ஒருவேளை ஒருவரின் கஷ்டத்தை என்னால் தீர்க்க இயலும் என்றாலும் நான் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறேன் என்பதை தேவன் எனக்கு கற்பித்தார்.
நீங்கள் என்ன கொடுக்க வேண்டுமோ அது போதாது என்று மட்டும் தயவு செய்து எண்ணாதீர். கஷ்டப்படுவோர், உடைக்கப்பட்டவர், பசியுற்றவர், வீடற்றவர் நம்மை சுற்றிலும் இருக்கின்றனர். இன்று அவர்களுக்கு உதவுவீர்களாக.
ஜெபம்
தேவனே, ஏழைகளுக்கும், தனிமை ஆனவர்களுக்கும் உதவுவதை பற்றி நீர் கரிசனையாக இருக்கின்றீர். நீதிக்காக உம்முடைய இருதயத்தை எனக்கு தருவதோடு நான் உதவ நீர் விரும்பும் கஷ்டப்படுவோரையும், உடைக்கப்பட்டவரையும் எனக்கு காண்பித்தருளும்.