“இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.” – 1 கொரி 2:2
‘அனேக கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தைக்கு பதிலாக மாம்சீக அறிவைத் தேடுவதில் மிகவும் பிஸியாக இருப்பதால் அவதிப்படுகிறார்கள். தேவனே, என் ஜனங்கள் அறிவு இல்லாததால் அழிந்து போகிறார்கள்…’ என்று சொல்கிறார் (ஓசியா 4:6).
பவுல் ஒரு படித்த மனிதர், மாம்சீக அறிவு நிறைந்தவர். அவர் தன்னை மற்றவர்களை விட சிறந்தவர் என்று நினைத்தார், கிறிஸ்தவர்களைக் கொல்ல முயன்றார். அதிர்ஷ்டவசமாக, கடவுள் அவருக்காக வேறு திட்டங்களை வைத்திருந்தார், மேலும் அவருடைய வாழ்க்கையை என்றென்றும் மாற்றியமைக்கும் விதத்தில் தன்னை பவுலுக்கு வெளிப்படுத்தினார். தேவனுக்கே ஸ்தோத்திரம்!
மாம்சீக அறிவைத் தேடுவது, ஆன்மீக அறிவின் முக்கியத்துவத்துடன் ஒப்பிடக் கூடியதில்லை என்பதை பவுல் உணர்ந்தபோது, அதற்குப் பதிலாக அதைத் தொடர முடிவு செய்தார். பவுலைப் போலவே, ஆவிக்குறிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். உலகப்பிரகாரமான காரியங்களைத் தேடுவதற்கு பதிலாக, முக்கியமற்ற காரியங்களால் நம் மனதை நிரப்புவதற்கு பதிலாக, நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து, தியானிக்க வேண்டும், அதினால் நம் மனதை நிரப்ப வேண்டும்.
கடவுளுடைய வார்த்தையை அறிவது உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதை அனுபவத்திலிருந்து நான் உங்களுக்கு சொல்ல முடியும். இது, பவுலை இதுவரை வாழ்ந்த கிறிஸ்தவர்களில் மிகப் பெரிய ஒருவராக மாற்றியது. அது உங்களையும் மாற்றி, கிறிஸ்துவில் உங்களின் அற்புதமான திட்டத்திற்குள்ளாக உங்களை அழைத்துச் செல்லும்.
தேவனுடைய வார்த்தையில் காணப்படும் ஆவிக்குறிய அறிவைத் தேட நான் இன்று உங்களை ஊக்குவிக்கிறேன். உங்கள் இருதயத்திலும் மனதிலும் இருக்கும் கடவுளின் வார்த்தை நீங்கள் உண்மையில் எதை தேடுகிறீர்களோ அதைக் கண்டறிய உதவும்.
ஜெபம்
ஆண்டவரே, ஒன்றுக்கும் உதவாத மாம்ச அறிவோடு என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. பவுலைப் போலவே, உம்மை அறிந்து கொள்வதிலும், உமது வார்த்தையை அறிந்து கொள்வதிலும் காணப்படும் ஆவிக்குறிய அறிவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தொடர எனக்கு உதவுவீராக.