“அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.” – 2 கொரி 10:5
கிறிஸ்தவர்களாக நம் சிந்தையிலே வரும் எல்லா எண்ணங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. மாறாக மேலே கொடுக்கப்பட்டிருக்கும் வசனம் சொல்வதைப் போன்று ஒவ்வொரு எண்ணத்தையும் வேதாகம அளவோடு அளக்க வேண்டும். இதோ நடைமுறைக்கேற்ற ஒரு உதாரணம். ஒருவர் உங்கள் உணர்வை காயப்படுத்துவாரேயென்றால், அதனால் நாள் கணக்கில் அவர்கள் மேல் வருத்தத்துடன் இருக்க மாட்டேன் என்று அந்த நொடியே தீர்மாணிக்க வேண்டும். இல்லையென்றால் கசப்பின் விதையை சாத்தான் ஊன்றுவதற்கு அது வாய்ப்பளித்து விடும்.
மாறாக, எதிர் மறையான எண்ணத்தை புறக்கணிக்க வேண்டும். உங்கள் சந்தோசத்தையும், சமாதானத்தையும் அதனால் இழந்து விடாமலிருக்க தெரிந்து கொள்ள வேண்டும்.
தேவனிடம் ‘உம்முடைய பெலன் எனக்கு வேண்டும். என்னை தவறாக நடத்தியவர்களையும், எனக்கு தவறு இழைத்தவர்களையும் மன்னிக்க விசுவாசத்தால் உம்முடைய கிருபையை பெற்றுக் கொள்கிறேன். நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். நான் தொடர்ந்து செல்ல எனக்கு உதவுவீராக. இயேசுவின் நாமத்திலே ஆமென்…’ என்று ஜெபியுங்கள்.
நம் மனம் தேவனுடைய வார்த்தையாலே புதிப்பிக்கப்படும் போது நம்முடைய எண்ணங்கள் மாறி, வேத வாக்கியங்களுடன் இணைந்து கொள்ளும். பின்னர் ஒவ்வொரு நாளும் நம் எண்ணங்களை சூழ்ந்துள்ள தேவ எல்லைகளும் நிலை நிறுத்தப்படும். உறுதியாக்கப்படும். இந்த எல்லைகள், எதிரியின் வஞ்சனைகளை வெளியே நிறுத்துவதோடு, தேவனுக்கேற்ற வாழ்க்கையை அனுபவித்து வாழ உங்களுக்கு உதவும்.
ஜெபம்
தேவனே, உம்முடைய எண்ணங்கள், பேச்சுகளோடு இணந்து செல்லும் சரியான எண்ணங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன். எதிரி தவறான எண்ணத்தை கொண்டு வரும் போது உம்முடைய வார்த்தை சொல்வதைப் போன்று, அதை சிறையாக்கி உமக்கு கீழ்படியச் செய்யத்தக்கதாக என்னை விழிப்புள்ளவனாக்குவீராக.