சரியான காரியத்தை நாடுகின்றீர்களா?

சரியான காரியத்தை நாடுகின்றீர்களா?

“தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” – ரோமர் 14:17

ரோமர் 14:17, தேவனுடைய ராஜ்யத்தை, பரிசுத்த ஆவிக்குள் நன்மை, சமாதானம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை என்று விளக்குகிறது.

நாம் அவருடைய ராஜ்யத்தை நாட வேண்டும், ஆனால் பலர் வேறு பல காரியங்களை தேடுவதிலே, தங்கள் வாழ்க்கையை செலவிடுகிறார்கள். நீதி, சமாதானம் மற்றும் மகிழ்ச்சி என்று வரும்போது, அவர்கள் மற்ற காரியங்களை தொடர்வதால், அவர்களிடம் அவை இருப்பதில்லை.

என்னிடம் எல்லா வகையான உலக காரியங்கள் இருந்தால், எனக்கு எந்த கவலையும் இல்லாமல், என் வாழ்க்கை சமாதானமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் நான் எவ்வளவு பொருட்களைப் பெற்றிருந்தாலும், அது ஒருபோதும் சமாதானத்தைக் கொண்டு வரவில்லை. உண்மையான சமாதானம் தேவனுடன் இணைந்து இருப்பதால் மட்டுமே வருகிறது.

இதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும், தவறான காரியங்களை நாடித் தேடியே கழித்து விடுகின்றனர்.

எனவே இன்று நீங்கள் என்ன தேடுகிறீர்கள்? உங்களுடைய பொக்கிஷம் என்ன? உலக விஷயங்கள் இறுதியில் உங்களை திருப்திப்படுத்தாது. ஆனால் நீங்கள் தேவனையும் அவருடைய நீதியையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தேடுவீர்களானால், நீங்கள்முழு திருப்திகரமான மற்றும் நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இன்று அவரைப் பின் தொடருங்கள்.


ஜெபம்

தேவனே, திருப்திபடுத்த இயலாத உலக காரியங்களைப் பின்தொடர்வதை நிறுத்த நான் இன்று முடிவு செய்கிறேன். நான் உம்முடன் ஒன்றாக இணைந்து இருக்க விரும்புகிறேன், எனவே நான் உம்முடைய நீதியையும், சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் தேடுகிறேன்.

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon