
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். (ரோமர் 12:18)
நாம் தேவனிடமிருந்து கேட்க விரும்பினால், அவருடைய பிரசன்னத்திற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். சூழ்நிலை என்பது நம்மைச் சூழ்ந்துள்ள சூழல் அல்லது முதன்மையான மனநிலையைக் குறிக்கும். சூழ்நிலை, மனப்பான்மையால் உருவாக்கப்படுகிறது. சில மனப்பான்மைகள் தேவனுடனான நமது உறவை மேம்படுத்துகிறது அல்லது தடுக்கிறது. தேவனிடமிருந்து கேட்பதற்கு நமக்கு சமாதானமான சூழல் தேவை. மேலும் ஆண்டவர் மீதான நம்பிக்கை மற்றும் நாம் வெறுப்பவர்களை மன்னிக்கும் மனப்பான்மையின் மூலம் சமாதானத்தைப் பேணலாம்.
சூழ்நிலையில் சச்சரவு இருக்கும் போது, நாம் அதை உணர முடியும். அதேபோல், மக்கள் மற்றும் சூழ்நிலைகள் சமாதானமாக இருக்கும் இடங்களில் நாம் சமாதானத்தை உணர முடியும். நாம் எங்கு சென்றாலும் சமாதானமான சூழ்நிலையை உருவாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். ஏனென்றால் கொந்தளிப்பின் மத்தியில் கடவுளிடம் இருந்து கேட்க முடியாது. சச்சரவு மற்றும் கருத்து வேறுபாடுகளுடைய மனப்பான்மை கடவுள் பேசக்கூடிய சூழ்நிலையை உருவாக்காது. ஆனால் இருதயமும், மனமும் அமைதியாகவும், அன்புடனும் இருக்கும் சமாதானமான சூழ்நிலையில் அவர் பேசுவார்.
கடவுளின் பிரசன்னத்தை முழுமையாக அனுபவிக்க, நம்மைச் சுற்றிலும், நம் இருதயங்களிலும் அவரைக் கனப்படுத்த அனுமதிக்கும் சூழ்நிலையை நாம் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். நாம் கடவுளிடம் இருந்து கேட்க விரும்பினால், இயேசு கிறிஸ்துவின் இறையாட்சிக்கு நாம் நம்முடைய அனைத்து மோசமான மனப்பான்மைகளையும் ஒப்புக் கொடுக்க வேண்டும். அதனால் அவருடைய பிரசன்னத்தை உணரவும் அவருடைய சத்தத்தைக் கேட்கவும் கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்.
இன்று உங்களுக்கான கடவுளுடைய வார்த்தை: “சமாதானத்தை ஏற்படுத்துபவரை” உங்கள் பங்காளராக ஆக்குங்கள்.