சர்ச்சையை தீர்த்துவிடு

சர்ச்சையை தீர்த்துவிடு

“மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.” – கலா 5:17

நம் வாழ்விலே, தேவ சித்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற நமக்கு தீர்மாணம் வேண்டும். தீர்மாணம் என்பதின் விளக்கங்களுள் ஒன்று, ஒரு சர்ச்சையை, அதிகாரப்பூர்வமான முடிவினால் அல்லது அறிக்கையினால் தீர்ப்பது என்பதாகும். இந்த விளக்கம் என்னை உற்சாகப்படுத்துகின்றது. ஏனென்றால் நான் சில பகுதிகளிலே என் தீர்மாணத்தை கட்டியெழுப்ப அதை அறிக்கையிடுவதுண்டு.

உதாரணமாக நான் களைப்படைந்து ஏதோவொரு காரணத்திற்காக எனக்காக நானே பரிதாபப்பட சோதிக்கப்படும் போது நான் என்னிடம் அப்படி செய்யாதே; உன் புலம்பலை நிறுத்தி விட்டு, ஒழுங்காக இரு என்று சொல்லிக் கொள்வேன். தேவன் என்னை நேசிக்கிறார், என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு!

கலா 5:17 ‘மாம்சமும் ஆவியும் இணந்திராது என்று சொல்கின்றது. தீர்மாணம் என்பதற்கான விளக்கத்திலே சர்ச்சையை தீர்ப்பது என்றிருக்கிறது, இது முக்கியமானதாகும். ஏனென்றால் ஏதோவொன்றிற்கு நீங்கள் உங்களை அர்ப்பணிப்பீர்களென்றால் உங்கள் மாம்சத்திற்கும் ஆவிக்கும் இடையே இருக்கும் தீராத சர்ச்சை தீர்க்கப்பட வேண்டும்.

தீர்மாணமாக இருக்க முயற்சி எடுக்க விரும்பாமலிருக்கலாம், ஆனால் விட்டு விடாதீர். இல்லையென்றால் நீங்கள் தேவனுடைய சித்தத்திற்கு வெளியே இருப்பீர்கள். தொடராமல் விட்டு விடலாமென்று நீங்கள் சோதிக்கப்படும் போது தேவனுடைய வார்த்தையை சார்ந்து அறிக்கையிடுங்கள். அவருடைய திட்டத்தைப் பின்பற்றுகையிலே உங்கள் ஆவிக்கும் மாம்சத்திற்கும் இடையே உள்ள சர்ச்சையை தீர்க்க தீர்மாணமாயிருங்கள்.


ஜெபம்

பரிசுத்த ஆவியானவரே, என் மாம்சத்திற்கும், ஆவிக்கும் இடையே உள்ள சர்ச்சையை தீர்க்க விரும்புகிறேன். அதை தீர்மாணமன்றி என்னால் செய்ய இயலாது. நான் ஒருபோதும் செய்வதை விட்டு விடாமலிருக்க என்ன்னை பெலப்படுத்தி சரியான அறிக்கைகளை எனக்கு தருவீராக

Facebook icon Twitter icon Instagram icon Pinterest icon Google+ icon YouTube icon LinkedIn icon Contact icon