06“தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,” – பிலி 1:10
தேவன் சிறந்தவர், அவருடைய பிரதிநிதிகளாக நாமும் அவ்வாறாக இருக்க வேண்டும். எனவே நாம் செய்யும் எல்லாக் காரியத்தையும் சிறப்பாக செய்ய வேண்டியது அவசியம். நாம் என்னவெல்லாம் செய்ய முயற்சிக்கின்றோமோ அதையெல்லாம் சிற்ப்பாக செய்ய வேண்டும். பவுல், நாம் எது சிறப்பான, உத்தமமான, உண்மையான காரியங்கள் என்பதை நாம் மதிப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும். உத்தமத்தை / சிறப்பை நம் வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளும் போது நாம் தேவனுடைய சந்தோசத்தைப் பெற்றிருப்போம். உலகத்திற்கு ஒரு நல்ல முன் மாதிரியாக இருப்போம்.
ஒரு சிறப்பான அறுவடையை அறுக்க, சிறப்பானதை விதைக்க வேண்டும். நாம் சிறப்பானதொரு வாழ்க்கை வாழாதிருக்கும் போது சிறப்பான பலன்களை எதிர்பார்க்க இயலாது. சிறப்பான வாழ்க்கை வாழ நமக்கு உதவும் ஒரு கருத்து, உறுதி, தீர்மாணம் போன்றவற்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று வேதம் நமக்கு போதிக்கின்றது.
தேவன் உங்கள் பாதையிலே கொண்டு வரும் எந்த செயலையும் சிறப்பாக செய்யுங்களென்று உங்களை உற்சாகப்படுத்துகிறேன். ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் தொடங்கினதைப் பாதியில் விட்டு விடாமல் அதை உங்களால் முடிந்த அளவு சிறப்பாக செய்து முடியுங்கள். உறுதியாய் தீர்மாணத்துடன் இருக்க தீர்மாணியுங்கள். சிறப்பான பலனுக்காக உங்களை அர்பணித்துக் கொள்ளுங்கள்.
ஒரு சிறப்பான மனப்பான்மையை தேவன் கனப்படுத்துகிறார். உங்களால் இயன்ற அளவு சிறப்பாக செய்வதை தெரிந்து கொள்ளுங்கள். அவர் எப்போதுமே உங்களுக்கு பெலனளிப்பார்.
ஜெபம்
தேவனே, ஒரு சிறப்பான வாழ்வை வாழ விரும்புகிறேன். ஒவ்வொரு சூழ்னிலையிலும், உறுதியுடனும், ஜாக்கிரதையுடனும், தீர்மாணத்துடனும் என்னால் இயன்ற அளவு சிறப்பாக செய்ய எனக்கு உதவியருளும். என்னை பெலப்படுத்தியருளும்.